எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது.
இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.
இந்த சூழலில் கடந்த 10, 11-ம் தேதிகளில் விலை மாற்றம் இல்லாமல், அதனுடைய வேகத்தில் நிசப்தம் நிலவி வந்த சூழலில், நேற்று முன்தினம் மீண்டும் எகிறி, உயர்ந்து காணப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81,920-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,240-க்கு விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.81,760-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.10,220-க்கு விற்பனையானது.
தங்கம் விலையை போல, வெள்ளியும் கட்டுக்கடங்காமல் உயருகிறது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.143க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


