Idhayam Matrimony

திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      தமிழகம்
Fireworks-factory 2024-02-1

Source: provided

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறுவதைப் பார்த்த அந்த பகுதியினர், இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்துக்குப் பிறது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் ஆலையில் வைக்கப்பட்டிருந்து பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மின் கசிவு காரணமாக ஆலையில் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து