முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2025      உலகம்
Trump 2023 03 05

Source: provided

டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் எச்சரித்துள்ளார். 

இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறது. நவரத்தினம் முதல் விவசாய பொருட்கள் வரை குறைவான வரி விதிப்பு மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம்.

தற்போது அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. அதேவேளையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா குறைந்த அளவிலான வரி மட்டுமே விதிப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

விவசாய பொருட்களில் சமரசம் செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏனென்றால் இந்தியாவில் சிறுகுறு விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுகிறார். அமெரிக்காவில் பண்ணை விவசாயம். அமெரிக்காவில் இருந்து வரி இல்லாமல் இந்தியாவில் விவசாயிகள் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால், இந்திய விவசாயிகளால் தாக்குப்பிடிக்க முடியாது. இதனால் இந்தியா கவனமாக செயல்பட்டு வருகிறது.

இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத வரி விதித்தது. இருந்த போதிலும் இந்தியா மவுனம் காத்து வந்தது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்போம் என இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. அப்போதும் இந்தியா அடி பணியவில்லை. இதனால் கூடுதலா 25 சதவீதம் வரி விதித்தது. இப்படி இந்தியாவுக்கு நெருக்கொடுத்து வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என அமெரிக்கா துடிக்கிறது. ஆனால், இந்தியா அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாமல் உள்ளது.இதற்கிடையே சீனா மற்றும் ரஷ்யா உடன் இந்தியா நெருக்கம் காட்டி வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையை தொடங்க ஆவலாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். நேற்று டெல்லியில் பேச்சுவார்ததை நடந்தது.

இந்த நிலையில், தற்போது அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக லுட்னிக் தெரிவித்திருப்பதாவது:- இந்தியா 1.4 பில்லியன் மக்களை கொண்டுள்ளதாக பெருமை பேசுகிறது. 1.4 பில்லியன் மக்களும் ஏன் ஒரு புஷல் (25.4 கிலோ) அமெரிக்க சோளத்தை வாங்க முடியாது?. அவங்க எல்லாத்தையும் நமக்கு விக்கிறாங்க. நம்ம சோளத்தை வாங்க மாட்டாங்கன்னு சொல்றது உங்களுக்குப் புரியலயா?. எல்லாத்துக்கும் வரி விதிக்கிறாங்க.

உங்கள் வரிகளைக் குறைக்கவும், நாங்கள் உங்களை நடத்தும் விதத்தில் எங்களை நடத்தவும் என டொனால்ட் டிரம்ப் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பல வருடங்களாக செய்த தவறைச் சரி செய்யவும், சரிசெய்யும் வரை வேறு வழியில் செல்லவும் (வரி விதிப்பை அமல்படுத்துவது) டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது உலகின் மிகப்பெரிய நுகர்வோன அமெரிக்காவுடன் வணிகம் செய்வதில் கடினமான நேரத்தை எதிர்கொள்ள வேண்டும். இதுதான் டிரம்பின் மாடல். இவ்வாறு லுட்னிக் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து