எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : “அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் கிடையாது, பகைவர்களும் கிடையாது. பா.ஜ.க. நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது” என தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். பின்னார் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் கிடையாது, பகைவர்களும் கிடையாது. அதுமட்டுமில்லாமல் தேர்தலுக்கு இன்னும் ஆறு ஏழு மாதங்கள் உள்ளன. தற்போது திமுக சார்பில் `உங்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் தான் வீதி வீதியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைப்பதாக தெரியவில்லை. மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ராசிபுரத்தில் இபிஎஸ் பேசிய கூட்டத்தில் கூட 30,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களின் எழுச்சி எங்கள் கூட்டணி பக்கம் தான் இருக்கிறது. டெல்லியில் அமித் ஷா உடன் பழனிசாமி பேசியது குறித்து ஆலோசிக்கவில்லை. மரியாதை நிமித்தமாக பழனிசாமியை சந்தித்து பேசினேன்.
அரசியலில் ஒருவரின் கருத்தை நிரந்தரமாக ஆதரித்தும், எதிர்த்தும் பேச முடியாது. தமிழகத்தில் வட மாவட்டம், தென் மாவட்டம் எனப் பிரிக்க வேண்டிய தேவையே கிடையாது. கொங்கு நாடாக இருந்தாலும் சரி, வடக்கு பகுதியாக இருந்தாலும் சரி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக நடக்கும். வருகின்ற 11ஆம் தேதி எனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க இருக்கிறேன். உத்தேசமாக மதுரையிலிருந்து ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன். பா.ஜ.க. நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


