முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் ரூ.60,000 கோடியில் மேம்பாட்டு நலத்திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      இந்தியா
PM-Modi-2025-09-27

ஜர்சுகுடா, ஓடிசாவின் ஜர்சுகுடாவில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரயில்வே மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் ரூ. 60 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் எட்டு ஐ.ஐ.டி.க்களின் விரிவாக்கத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய மாணவர்கள் படிப்பதற்கான திறன் கொண்டதாக இது அமைய உள்ளது.

மேலும் சம்பல்பூர் நகரில் ரூ. 273 கோடி செலவில் கட்டப்பட்ட 5 கி.மீ மேம்பாலத்தையும் அவர் திறந்துவைத்தார். ஜூன் 2024இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த 15 மாதங்களில் பிரதமர் ஒடிசாவிற்கு வருகை தருவது இது ஆறாவது முறையாகும். ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு பிரதமர் மோடி ஜார்சுகுடா வருகை தருகிறார். முன்னதாக, ஒடிசாவின் இரண்டாவது வணிக விமான நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக அவர் செப்டம்பர் 22, 2018 அன்று ஜார்சுகுடா நகரத்திற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து