முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூருவில் டிரோன் பறக்க தடை

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      இந்தியா
Drone 2023 06 12

Source: provided

மைசூரு : தசரா திருவிழாவில் மைசூரில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைசூருவில் தசரா விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் வருகிற 2-ந்தேதி நடக்க உள்ளது. இதையொட்டி மைசூரு பன்னிமண்டபத்தில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் 1-ந்தேதியும், 2-ந்தேதியும் டிரோன் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

அதாவது, டிரோன்களை பறக்கவிட்டு அதில் உள்ள மின்விளக்கு மூலம் பல்வேறு வடிவங்கள் உருவாக்கப்படும். இதனை காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த டிரோன் சாகச நிகழ்ச்சியையொட்டி இன்றும், நாளையும் டிரோன் சாகச ஒத்திகை நடக்க உள்ளது. 

இதனால் இன்று, நாளையும் மற்றும் 1, 2-ந்தேதி என 4 நாட்கள் மைசூரு நகரில் தனியார் டிரோன்கள் பறக்க தடை விதித்து செஸ்காம் (சாமுண்டீஸ்வரி மின்வாரியம்) உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை மீறி தனிநபர்கள் யாராவது டிரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செஸ்காம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் தசரா விழாவை பார்க்க வரும் இன்ஸ்டாகிராம், யூ-டியூப் பிரபலங்கள் பலர் மைசூரு நகரை டிரோன் மூலம் படம் பிடித்து வருகிறார்கள். இதனால், மேற்கண்ட 4 நாட்கள் தனியார் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து