எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கரூர் : கரூரில் நேற்று த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியான நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தால் கரூரில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் அணி வகுத்தபடி செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக இருந்தது.
அரசு மற்றும், தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள், பெண்கள் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, இன்று காலை கரூருக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


