முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் பிரசாரத்தில் அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்தது ஏன்...? - அரசு தரப்பில் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2025      தமிழகம்
Karur 2025-09-28

சென்னை, விஜய் பிரசாரத்தில் அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்தது குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில் குறிப்பாக, விஜய் பிரசாரத்தின்போது அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்ததற்கான காரணம் குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது;-

கரூரில் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் 19 வாகனங்கள் உள்ளன. கூட்டம் நடந்த இடத்தில் 6 வாகனங்கள் இருந்தன. நெரிசல் காரணமாக மயங்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கோரி முதலில் மாலை 7.14 மணிக்கு 108 ஆம்புலன்சுக்கு அழைப்பு வந்தது. 7.20க்கு முதல் முறையாக கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் சென்றது. அடுத்த அழைப்பு 7.15 மணிக்கு வந்த நிலையில் 7.23 க்கு ஆம்புலன்ஸ் சென்றது. கட்சியினரின் ஆம்புலன்ஸ்கள் தயாராக இருந்ததால், அது உடனே கொண்டு வரப்பட்டது. இரவு 7.45 முதல் 9.45 வரை அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 33 தனியார் ஆம்புலன்ஸ்கள் காவல்துறை கேட்டதன் பேரில் வந்தடைந்தன. சம்பவத்தை தொடர்ந்து அண்டை மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைப்பு. கூட்ட நெரிசலுக்கு பின்னே ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து