முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசா போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை: அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கு பிரதமர் மோடி வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2025      இந்தியா
Modi-2024-07-27

புதுடெல்லி, காசா போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் ட்ரம்பின்  முயற்சிக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். 

பாலஸ்தீனத்தை நிர்வகித்துவரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாலஸ்தீனம் மீது போர் அறிவித்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார். சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்போரில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். போரை முடிவுக்கு கொண்டுவர உலகநாட்டு தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.

இந்தநிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்தாண்டில் 4-வது முறையாக அமெரிக்கா சென்றார். அப்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் காசா போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காசாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட பல கட்ட முயற்சிக்குப்பின், காசா போர் நிறுத்தத்துக்காக ட்ரம்ப்பால் முன்மொழியப்பட்ட முக்கியமான 20 நிபந்தனைகளை உள்ளடக்கிய விரிவான திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து, ஹமாஸ் அமைப்பின் சம்மதத்தை எதிர்நோக்கி சர்வதேச சமூகமும் காத்திருக்கிறது.

முன்னதாக பத்திரிகையாளர்களிடம் ட்ரம்ப் பேசியபோது, “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்தவொரு நாள். காசா போரை முடிவுக்கு கொண்டு வரும்நேரம் வந்துவிட்டது” என தெரிவித்தார். இதனால் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் தொடங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான விரிவான திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததை இந்தியா வரவேற்கிறது. இது பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கும், பரந்த மேற்கு ஆசிய பிராந்தியத்திற்கும் நீண்டகால நிலையான அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஒரு சாத்தியமான பாதையை வழங்கும். ட்ரம்பின் முன்முயற்சிக்கு இருதரப்பினரும் ஒன்றிணைந்து மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியைப் பாதுகாப்பதற்கான முயற்சியை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து