Idhayam Matrimony

500 பில்லியன் டாலரை நெருங்கிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

வியாழக்கிழமை, 2 அக்டோபர் 2025      உலகம்
Elon musk 2023-07-13

நியூயார்க், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலரை நெருங்கியது.

போர்ப்ஸ் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலரை நெருங்கி உள்ளது. ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு சுமார் 8.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாக தகவல். இதன் மூலம் உலக பணக்காரர்களில் 500 பில்லியன் டாலரை நெருங்கிய முதல் நபர் என மஸ்க் அறியப்படுகிறார். இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு 1.25 மணி அளவில் அவரது சொத்து மதிப்பு 499.5 பில்லியன் டாலர்கள். இது போர்ப்ஸ் உலக பணக்காரர்களின் நிகழ்நேர பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்வு காரணமாக மஸ்க்கின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை சுமார் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் புதன்கிழமை அன்று மட்டும் சுமார் 4 சதவீதம் டெஸ்லா பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. 54 வயதான மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் உள்ளிட்ட நிறுவனங்களை அவர் தன்வசம் கொண்டுள்ளார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், 351.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் மெட்டா நிறுவன சி.இ.ஓ. மார்க் ஸூகர்பெர்க் - 245.8 பில்லியன், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் - 233.5 பில்லியன், கூகுள் இணை நிறுவனர் லேரி பேஜ் 203.7 பில்லியன் சொத்து மதிப்புடன் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து