Idhayam Matrimony

த.வெ.க. தலைவர் மீது ஏன் வழக்குப்பதியப்படவில்லை? தி.மு.க. செய்தித் தொடர்பாளர் விளக்கம்

வியாழக்கிழமை, 2 அக்டோபர் 2025      தமிழகம்
Vijay-2025-10-02

சென்னை, த.வெ.க. தலைவர் மீது ஏன் வழக்கு இல்லை என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என விசிக திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தி.மு.க. செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது;-

கரூர் துயரச்சம்பவம் குறித்து விசாரிக்க, அரசு தரப்பில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்தபின்னரே குற்றவாளி யாரென முடிவாகி, அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதுவரை விஜய் சம்பவ இடத்துக்கு வந்து பேசிவிட்டு சென்றவர் மட்டுமே. 

இதற்கிடையே சம்பவ இடத்தில் தண்ணீர் உணவு போன்ற வசதிகள் இல்லை போன்ற புகார்களில் உள்ளூர் நிர்வாகிகள் மீது உள்ள சில தவறுகள் தெரியவந்ததால், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. த.வெ.க. சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் அந்த இடத்திலிருந்து சில ஏற்பாடுகளை செய்திருந்தார் என்பதால், அவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறான சமூக வலைதளப் பதிவு போட்டதால்தான் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து