எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆர்.எஸ்.எஸ். எனும் பேரியக்கம், ஒரு வரலாற்றுத் தாக்கம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளி யிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தேசத்தையும் சுயஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கொண்டு, மக்கள் பணியை மகேசன் ஆணையாக ஏற்று உழைத்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். எனும் பேரியக்கம் இன்றுடன் தனது நூறாண்டுகளை நிறைவு செய்கிறது. தங்கள் மீது விழுந்த அனைத்து விமர்சனங்களையும் தகர்த்து, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தன்னலமற்ற தலைவர்களை உலகிற்குப் பரிசளித்து, இன்று நூற்றாண்டு விழா காணும் ஆர்.எஸ்.எஸ்.-இன் வலுவான கட்டமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சுயநலமற்ற ஒழுக்கத்தின் பிம்பமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷம். இப்படிப்பட்ட பாரம்பரியமிக்க ஒரு பேரியக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை எனது வாழ்நாள் பேறாகக் கருதுகிறேன்.
அரசியல் லாபத்திற்காகக் கொண்ட கொள்கைகளைப் பிறரிடம் அடகு வைக்கும் அமைப்புகளுக்கு மத்தியில், "அகண்ட பாரதம்" எனும் ஒற்றைச் சொல்லைத் தங்களின் உயிர் மூச்சாகக் கொண்டு ஆண்டாண்டு காலமாக உழைத்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடந்து சிறக்கட்டும்! ஆர்.எஸ்.எஸ்.-இன் மக்கள் பணி தொய்வின்றி தொடரட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


