முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2025      இந்தியா
Tejaswi-Yadav

Source: provided

பாட்னா : பீகாரில் அரசு வேலை இல்லா குடும்பங்களில், குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும். நவ. 14முதல், பீகார் மக்கள் வேலையின்மை பிரச்னையிலிருந்து விடுபட்டுவிடுவர் என்று ராஷ்திரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும் பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி என்ற தேர்தல் வாக்குறுதியை தேஜஸ்வி யாதவ் பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய இரு வேறு தேதிகளில் மொத்தம் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், பீகாரில் எதிர்க்கட்சிகளின் இன்டியா கூட்டணி ‘மகாகாத்பந்தன்’ பெயரில் போட்டியிடுகிறது.

ராஷ்திரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும் பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகாத்பந்தன் கூட்டணியில், காங்கிரஸ், தீபங்கர் பட்டாச்சார்யா தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), சிபிஐ(கம்யூனிஸ்ட்), சிபிஎம்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) ஆகியவை உள்ளன.

தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் பீகாரில், கடந்த வியாழக்கிழமை தேஜஸ்வி யாதவ் முக்கியமான வாக்குறுதியை மக்களிடம் அளித்தார். அதில், ‘மகாகாத்பந்தன் அரசு அமைந்த 20 நாள்களுக்குள், பீகாரில் ஒவ்வொரு குடும்பத்திலும் அரசு வேலை கிடைத்திருப்பதை உறுதிசெய்ய, அரசால் சட்டம் நிறைவேற்றப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் அதே வாக்குறுதியை தேஜஸ்வி யாதவ் நேற்றும் அளித்துள்ளார். தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களுடன் நேற்று (அக். 12) பேசியதாவது, “பீகாரில் அரசு வேலை இல்லா குடும்பங்களில், குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும். நவ. 14முதல், பீகார் மக்கள் வேலையின்மை பிரச்னையிலிருந்து விடுபட்டுவிடுவர்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து