முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 1,500 பேர் விரைவில் பணி நிரந்தரம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை : 2026 பிப்ரவரிக்குள் கோவில்களில் 5 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று சென்னை, பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர் யூனியன் சார்பில் நடைபெற்ற மாநில சிறப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பின்னர், இந்த ஆட்சி ஆன்மிகத்திற்கும், இறையன்பர்களுக்கும் எதிரான ஆட்சி என்ற பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்தவர்களின் எண்ணங்களை அடித்து நொறுக்கி சுக்குநூறாக்கி, இந்த ஆட்சி எல்லோருக்குமான ஆட்சி என நிரூபித்து காட்டியவர் தமிழ்நாடு முதல்வர் . இந்த ஆட்சி பொறுப்பேற்ற போது கொரோனா என்ற கொடிய தொற்றின் தாக்குதலிருந்து மக்களை காக்க அனைத்து அமைச்சர்களையும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களை போல் பணியாற்ற வைத்து, கொரோனா தொற்று காலத்தில் நிவாரண உதவி வழங்குகின்ற கோப்பில் முதன்முதலில் கையெழுத்திட்டவர் நமது முதல்வர்  ஆவார்.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கொரோனா காலத்தில் அர்ச்சர்களுக்கு உதவித்தொகையாக ரூ.4,000 மற்றும் ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்ற வரிகளுக்கேற்ப இந்த அரசு பொறுப்பேற்றபின் நியமிக்கப்பட்ட 46 ஓதுவார்களில் 12 பேர் பெண்கள் என்பது பெருமைக்குரியதாகும். இது தந்தை பெரியாரின் கனவு, அதை நனவாக்கிவார் வாழும் பெரியார் தமிழ்நாடு முதல்-மைச்சர் என்பதை கோடிட்டு காட்ட விரும்புகின்றேன்.

இந்த ஆன்மிக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் 3,707 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ரூ.8,000 கோடி மதிப்பிலான கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுள்ளோம். இந்து சமய அறநிலையத்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு இந்த ஆட்சியில் தான் ரூ.1,200 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கோவில் நிதியை அரசு பயன்படுத்திய நிலைமாறி, இந்த ஆட்சியில்தான் கோவில்களுக்கு அரசு நிதி இந்த அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் கோவில்களின் திருப்பணிக்கு உபயதாரர்கள் மட்டும் ரூ.1,502 கோடியை முன்வந்து அளித்துள்ளனர். இது இந்த ஆட்சியின் நேர்மைக்கும், செயல்திறனுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கோவில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றியவர்களை வரன்முறைப்படுத்த கடந்த ஆட்சியில் அறிவிப்பு செய்திருந்தாலும், அதனை செயல்படுத்தவில்லை. ஆனால் திராவிட மாடல் அரசின் நான்காண்டுகளில் 1,351 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 5 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றியுள்ள 1,500 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதனை முதல்வர்  உறுதி செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து