எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : நெருங்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளில் கடந்த சில நாட்களாகவே பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தீபாவளி விற்பனையும் எதிர்பார்த்ததை விட அதிகமாக நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஜவுளிக்கடைகளுக்கு சென்று ஆடைகளை வாங்கினார்கள். இதனால் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளில் நேற்று காலையிலேயே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சேலைகள், சுடிதார், பேண்ட், சட்டை, ஜீன்ஸ், வேட்டி உள்ளிட்ட துணிமணிகளை வாங்கினார்கள். குழந்தைகளுக்கான ஆடைகளும் விற்பனை அமோகமாக நடந்தது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய மாடல்களில் ஆடைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு இருந்தன.
சென்னையின் முக்கிய வணிகப்பகுதி தி.நகர் ஆகும். வழக்கமாக தி.நகரில் உள்ள கடைகளுக்கு பகல் 12 மணிக்கு பிறகுதான் வாடிக்கையாளர்கள் வரத்தொடங்குவார்கள். ஆனால் தீபாவளி ஜவுளி வாங்குவதற்காக நேற்று காலை 10 மணியில் இருந்தே தி.நகரில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் அலை அலையாக வரத்தொடங்கினார்கள்.
தி.நகர் ரங்கநாதன் தெருவில் நேற்று காலையில் இருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் ரங்கநாதன் தெருவில் தரையே தெரியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டது.
ரங்கநாதன் தெருவில் ஜவுளி வாங்குவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் மின்சார ரெயில்களில் வந்து இறங்கினார்கள். இதனால் ஒவ்வொரு மின்சார ரெயில்கள் வரும்போதும் ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தபடியே காணப்பட்டது.
ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளுக்குள்ளும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக கடைகளின் நுழைவு வாயில்களில் பொதுமக்கள் உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருந்ததால் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. பலரும் முண்டியடித்தபடியே கடைக்குள் நுழைந்தனர்.
தி.நகரில் நேற்று பகலில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் ஆடை வாங்க பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். அவர்கள் மழை பெய்யும்போது கடைகளில் ஒதுங்கி நின்று, மழை வெறித்ததும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி தங்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கினார்கள்.
இதேபோல் தி.நகர் உஸ்மான் சாலை, பாண்டிபஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் தி.நகர் முழுவதுமே நேற்று பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இதேபோல் சென்னை அண்ணாநகர், பாடி, அம்பத்தூர், பெரம்பூர், போரூர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், நங்கநல்லூர், கீழ்க்கட்டளை, திருவான்மியூர், மயிலாப்பூர், காரப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகளிலும் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் தமிழகம் முழுவதும் குறிப்பாக மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை நகரங்களில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


