எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியான அறிக்கையில், ‘எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் காவல் துறை இணை மற்றும் ஆணையர்கள், சிஎம்டிஏ பொது மேலாளர், எம்டிசி துணை மேலாளர், எஸ்இடிசி மேலாண் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் கடந்த அக்டோபர் 14 அன்று மாநில போக்குவரத்து ஆணையரகத்தில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளவும், அதே சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் சென்று வர கூடுமான வரை வேண்டாம் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, ஆம்னி பேருந்துகளில் 50% மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் சுங்க சாவடிகளில் இடையூறு இன்றி செல்ல தனியான வழித்தடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு அதனை கண்காணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் உள்ள 12 சரகங்களில் சிறப்பு பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு அக்டோபர் 16 முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொது மக்கள் போக்குவரத்து தொடர்பான புகார்களை 24/7 தெரிவிக்கும் பொருட்டு தமிழகம் உள்ள 12 சரக அலுவலகங்களிலும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் செய்திதாள் மற்றும் செய்தி தொலைக்காட்சி வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன. இச்செயல்பாட்டின் மூலம் இதுவரை 357 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.4355961/- இணக்க கட்டணம் மற்றும் வரியாக பெறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அபி பஸ், ரெட் பஸ், மேக் மை ட்ரிப் போன்ற முன் பதிவு ஆன்லைன் செயலிகள் கண்காணிக்கப்பட்டு அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை கண்டறிந்து கட்டணங்களை குறைக்க அறிவுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புகாரளிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்:
1. போக்குவரத்து - சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை 1800 425 6151.
2.இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) 97893 69634.
3. இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) 93613 41926.
4. இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை 90953 66394.
5. இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர் 93848 08302.
6. துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம் 96773 98825.
7. துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் 98400 23011.
8. துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் 78456 36423.
9. துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு 99949 47830.
10. துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி 90660 32343.
11. துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் 90257 23800.
12. துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி 96981 18011.
13. துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் 95850 20865.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
விராட் கோலி பதிவு வைரல்
16 Oct 2025இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவு: ஐ.பி.எல். மதிப்பு ரூ.76,100 கோடியானது
16 Oct 2025மும்பை: ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.76,100 கோடியாக தற்போது குறைந்துள்ளது.
-
மெஸ்ஸியின் இந்திய பயணம் ரத்து?
16 Oct 2025திருவனந்தபுரம்: பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
ஆஸ்திரேலிய தொடர்: பயிற்சியை தொடங்கிய ரோகித், கோலி
16 Oct 2025மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய முன்னணி வீரர்கள் ரோகித் - விராட் கோலி அங்கு
-
செப்டம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி. விருது அபிஷேக், மந்தனாவுக்கு அறிவிப்பு
16 Oct 2025துபாய்: செப்டம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி. விருதை இந்தியாவின் அபிஷேக், மந்தனா வென்றுள்ளனர்.
அதிரடி ஆட்டக்காரர்...
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22-ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை: அமைச்சர் தகவல்
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22-ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் வாக்குவாதம்
17 Oct 2025சென்னை, சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
-
மதுரை மேயர் ராஜினாமா: தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல்
17 Oct 2025மதுரை : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
-
வி.ஐ.டி. போபால் பல்கலையில் 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
17 Oct 2025சென்னை, வி.ஐ.டி. போபால் பல்கலைகழகத்தில் 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
நவீன தமிழகத்தை கட்டமைத்த இயக்கம் அ.தி.மு.க.: இ.பி.எஸ்.
17 Oct 2025சென்னை : திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் அ.தி.மு.க. என்று அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இருமல் மருந்து விவகாரம்: இ.பி.எஸ். கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்
17 Oct 2025சென்னை : கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை” என அமைச்சர்
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
இனி சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
17 Oct 2025சென்னை, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


