எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கான நிதியை குறைக்கும் யோசனையை பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு முன்வைத்தார். இது நாடு முழுவதும் எதிர்ப்புகளை கிளப்பியது. எனவே அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அதன்பிறகு புதிய பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் செபாஸ்டியனையே மீண்டும் பிரதமராக நியமித்து அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவிட்டார். இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு எதிராக 271 பேர் வாக்களித்தனர். ஆனால் பெரும்பான்மை பெற 289 வாக்குகளை பெற வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி யடைந்ததால் அவரது பதவி தப்பியது. எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் 2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


