முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? மனோஜ் பாண்டியன் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      தமிழகம்
CM1-2025-11-04

சென்னை, தி.மு.க.வில் இணைந்தது குறித்து மனோஜ் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன். அதி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட வெற்றிபெற்ற இவர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாக இருந்து வந்தார். இந்நிலையில், மனோஜ் பாண்டியன் நேற்று தி.மு.க.வில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் சென்ற மனோஜ் பாண்டியன் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “வேறொரு இயக்கத்தை நம்பி, அந்த இயக்கத்தின் சொல்படிதான் நடக்கின்ற துர்பாக்கியமான காலம்தான் தற்போது அதி.மு.க.வில் இருக்கிறது. உழைப்பை அங்கீகரித்து அங்கீகாரம் தராத, உழைப்பு வேண்டாம் என்று ஒவ்வொரு தொண்டரையும் விரட்டக்கூடிய எடப்பாடி பழனிசாமியுடைய நோக்கம் என்ன, அவருடைய சிந்தனை என்ன..?. பாஜகவின் கிளைக்கழகமாக அதி.மு.க. உள்ளது. எந்த கொள்கைக்காக அதி.மு.க. உருவானதோ அது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

கொள்கையைப் பின்பற்றக்கூடிய திராவிடக் கட்சியுடன் நான் இணைந்துள்ளேன். நேற்று திராவிடக் கொள்கையை பாதுகாக்கின்ற தலைவராக, போராட்டக் கொள்கையை எங்கும் அடகு வைக்காத ஒரு தலைவராக, எவ்வளவு சோதனை வந்தாலும் முயற்சிகளைச் சிறப்பாக செய்யக்கூடிய தலைவராகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதால், தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளேன். நேற்று மாலை 4 மணிக்கு எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து