முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      தமிழகம்
Anbil-2025-11-04

சென்னை, தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

முன்னதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து கூறுகையில், “நவம்பர் 4-ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் பொதுத்தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். கூட்டத்தின் நிறைவில் அன்றைய தினமே 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் என்று கூறி இருந்தார். மேலும் 2026-ம் ஆண்டு சட்ட சபை தோ்தல் நடைபெற உள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு தேர்வு நடைபெறும் தேதி தயாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட அறிவிப்பில், “2026-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும். மே.8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும்.

மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடைபெறும். 11-ம் வகுப்பில் தவறிய மாணவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி முதல் மறுதேர்வு நடைபெறும். 11-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 21 வரை நடைபெறுகிறது.

மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்களும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.70 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். கணக்குப்பதிவியல் தேர்வுகளுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்லலாம். ஓவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் இடைவெளி இருக்கும் வகையில் தேர்வு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

1) மார்ச் 11 - தமிழ் மற்றும் மொழிப்பாடம்.

2) மார்ச் 16 - ஆங்கிலம்.

3) மார்ச் 25 - கணிதம்.

4) மார்ச் 30 - அறிவியல்.

5) ஏப்ரல் 2  - சமூக அறிவியல்.

6) மே 20 - தேர்வு முடிவு வெளியீடு.

12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

1) மார்ச் 2 - தமிழ்.

2) மார்ச் 5- ஆங்கிலம்.

3) மார்ச் 9 - வேதியல்.

4) மார்ச் 13 - இயற்பியல்.

5) ஏப்ரல் 17  - கணிதவியல்.

6) மே 8 - தேர்வு முடிவு வெளியீடு.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து