முகப்பு

உலகம்

poli 2017 09 27

போலியான படத்தைக் காட்டிய விவகாரம்: பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்கிறது ஐ.நாகூட்டத்தில் இந்திய பெண் அதிகாரி பதிலடி

27.Sep 2017

நியூயார்க்: ஐ.நா. பொது சபை கூட்டத்தில் தவறான ஒரு புகைப்படத்தைக் காட்டி இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டிய நிலையில் அந்த நாடு ...

kapul 2017 09 27

காபூல் விமான நிலையத்தில் தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல்

27.Sep 2017

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதுகுறித்து ஆப்கன் உள்துறை ...

girls car driving 2017 09 27

பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து சவுதி அரசர் உத்தரவு

27.Sep 2017

 சவுதி: சவுதியில் பெண்கள் கார் ஒட்ட அனுமதி அளித்து அந்நாட்டு அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பான செய்தி சவுதியின் ...

london 2017 09 26

லண்டன் மெட்ரோ ரயில் பாதையில் குண்டு வெடிப்பு?

26.Sep 2017

லண்டன்: லண்டன் டவர் ஹில் சுரங்க ரயில் பாதையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ...

I  D  Ambassador Ha Do To Chuan 2017 09 26

மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடத்தப்படவில்லை ஐ. நா. தூதர் ஹா டோ சுவான் தகவல்

26.Sep 2017

யாங்கூன்: மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு எதும் நடத்தப்படவில்லை என்று அந்நாட்டுக்கான ஐ. நா. தூதர் ...

vadakoria 2017 09 26

நாங்கள் அவர்கள் மீது போர் அறிவிக்கவில்லை வடகொரியா கூறுவது அபத்தம் : அமெரிக்கா

26.Sep 2017

வாஷிங்டன்: நாங்கள் அவர்கள் மீது போர் அறிவிக்கவில்லை. வடகொரியாவின் குற்றச்சாட்டு அபத்தமானது" என்று அமெரிக்கா ...

indo-china 2017 09 26

பாக். பற்றிய சுஷ்மா சுவராஜின் பேச்சுக்கு சீனா எதிர்ப்பு

26.Sep 2017

பெய்ஜிங்: ஐ. நா.பொது சபை கூட்டத்தில் நீங்கள் ஜிகாதிகளை உருவாக்குகிறீர்கள் என்று பாகிஸ்தான் குறித்து சுஷ்மா சுவராஜ் கூறியதை சீனா ...

japan primeminister 2017 09 26

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு

26.Sep 2017

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் பதவிக் காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது.இந்நிலையில் வடகொரியாவின் ...

angela-merkel-wins-forth-term 2017 09 25

33.2 சதவீதம் வாக்குகள் பெற்று ஜெர்மன் பொது தேர்தலில் ஏஞ்சலா மெர்கல் வெற்றி 4-வது முறையாக பிரதமர் ஆகிறார்

25.Sep 2017

பெர்லின்: ஜெர்மன் பொது தேர்தலில் ஏஞ்சலா மெர்கல் வெற்றி பெற்றார். இதன் மூலம் அந்நாட்டில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ...

border 2017 09 25

வங்கதேசத்தில் இருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை தடுக்க மிளகாய் பொடியை பயன்படுத்தும் வீரர்கள்

25.Sep 2017

புதுடெல்லி: எல்லையில் ரோஹிங்கியா முஸ்லிம்களை தடுக்க பிஎஸ்எப் வீரர்கள் மிளகாய் பொடியை பயன்படுத்தி வருகின்றனர்.மியான்மரில் ...

trump1

வடகொரியா உட்பட8 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு புதிய பயண தடை அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை

25.Sep 2017

வாஷிங்டன்: வடகொரியா உட்பட எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு புதிய விதிமுறைகள் அடங்கிய பயண தடையை அமெரிக்க ...

london acid attack 2017 9 24

லண்டனில் அமில தாக்குதல்: 6 பேர் காயம்

24.Sep 2017

லண்டன் : லண்டனில் அடையாளம் தெரியாத நபர்கள், அமிலம் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருளை வீசியதில் ஆறு பேர் காயமடைந்தனர். இது ...

sheikh-hasina 2017 9 24

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை படுகொலை செய்யும் சதிதிட்டம் முறியடிப்பு

24.Sep 2017

டாக்கா : வங்கதேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை படுகொலை செய்யும்  சதிதிட்டம் இந்திய உளவுத்துறையின் உதவியால் ...

chinese robot 2017 9 24

உலகில் முதன் முறையாக பல் அறுவை சிகிச்சை செய்து சீன ரோபோ சாதனை

24.Sep 2017

பெய்ஜிங் : உலகில் முதன் முறையாக சீன ரோபோ பல் அறுவை சிகிச்சை செய்து புதிய பற்களை பொருத்தி சாதனை படைத்துள்ளது.சீனாவில் பல் சிகிச்சை ...

Ivanka-Trump 2017 9 24

டிரம்ப் மகள் போன்று மாற முகம் மாற்று ஆபரேஷன் செய்ய அமெரிக்க பெண்கள் ஆர்வம்

24.Sep 2017

நியூயார்க் : அமெரிக்க் அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா போன்று மாற முகம் மாற்று ஆபரேஷனுக்கு பெண்கள் ஆர்வம் காட்டி ...

TamilisaiI 2017 9 10

ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ விசாரணை தேவையில்லை : தமிழிசை சவுந்தரராஜன்

24.Sep 2017

புதுடெல்லி :  ஜெயலலிதாவின் மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை தேவை இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ...

mexico earthquake 2017 9 24

மெக்சிகோவை மீண்டும் உலுக்கிய பூகம்பம்: சுடுகாடாகக் காட்சியளிக்கும் தெருக்கள்

24.Sep 2017

ஓக்சாகா : மெக்சிகோவை மீண்டும்பூகம்பம் உலுக்கியது. இதனால் மெக்சிக்கோ நகரத் தெருக்கள் சுடுகாடாகக் காட்சியளிக்கின்றன.இந்த ...

pakistan test 2017 9 24

கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை : பாகிஸ்தான் சோதனை

24.Sep 2017

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கடற்படை நேற்று ஹெலிகாப்டரில் இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை சோதனை செய்தது.பாகிஸ்தான் ...

iran-missile-test 2017 9 24

அமெரிக்க எச்சரிக்கையை மீறி ஈரான் ஏவுகணை சோதனை

24.Sep 2017

டெகரான் : புதிய நடுத்தர தொலைவு ஏவுகணை ஒன்றை நேற்று சோதனை செய்ததாக ஈரான் அறிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ...

China 2017 7 24

வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடு - அக். 1-ம் தேதி முதல் அமல்படுத்த வர்த்தக அமைச்சகம் முடிவு

24.Sep 2017

பெய்ஜிங் : வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும்  அக். 1-ம் தேதி முதல்  இதை அமல்படுத்த  ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தூக்கமின்மை

பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, ஆரம்பத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி ஏற்படும். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும் ஆபத்து அதிகம்.

மிகவும் சிறியது

கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், நானிட் மைக்ரோ என்ற உலகின் மிகச்சிறிய அதாவது 1.8 அங்குல அளவே உயரம் உடைய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இதில், கால், மெசெஜ், வாய்ஸ் ரெக்கார்ட், கேமரா, புளூ டூத், ஹெட்போன்கள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஸ்மார்ட் வாட்சாகவும் பயன்படுத்த முடியும்.

ஆஸ்துமாவுக்கு ...

கணேச முத்திரை உடலில் உள்ள 6 ஆதார சக்கரங்களில், நான்காவது சக்கரமான அனாகத்தை தூண்டவல்லது. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மூச்சை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்து, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும். தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்தால் மிகுந்த பயன்.

சற்று புதுமையானது

விஞ்ஞானிகள் பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். வளரக்கூடியதாகவும், வளைவு நெளிவுடன் உண்மையான பாம்பினை போன்று தோற்றமளிக்கும் இந்த ரோபோ மணிக்கு 35 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும், 100 கி எடையுடையது. இந்த பாம்பு ரோபோ, பேரழிவு அல்லது அவசர கால நேரத்தில் அதிகம் பயன்படுமாம்.

உடற்பயிற்சி

நாம் எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடலும், மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பது முக்கியம். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவது அல்ல. உடலை வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.  எனவே ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.

பெண்களின் மூளை

‘அல்சமீர்’ எனும் மறதி நோய் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுறுசுறுப்பு, ஒரு வி‌ஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றில் ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் தெரியவந்தது. எல்லா செயல்களிலும் மிகவும் உறுதியாக உள்ளதும், மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அப்போது சில பாதிப்புக்குள்ளாகுவதும் தெரியவந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையால்....

ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் பைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே பைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு பைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்ளும். அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த வினியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற்படும்போது, இவை தான் இதயத்தசைகளுக்கு ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகவோ மாரடைப்பின் கடுமை குறையவோ வாய்ப்பு உள்ளது.

சிகரெட் கழிவில் ....

சிகரெட் புகைத்த பின் எறியப்படும், பஞ்சுடன் கூடிய கழிவு துண்டுகளை ரோடு போட பயன்படுத்த முடியுமாம். ரோடு போட‘பாராபின் வேக்ஸ்’ எனப்படும் மெழுகு மற்றும் ரசாயன பொருளுடன் சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து ஒரு கலவை தயாரிக்கப்படுகிறது. இதை கொண்டு போடப்படும் ரோடு பலம் வாய்ந்ததாகவும்,  அந்த ரோட்டில் வெப்பம் அதிகம் வெளியேறுவதும் தடுக்கப்படுமாம்.

எச்சரிக்கும் ஆய்வு

மது குடிக்கும் பழக்கத்தால் பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் மது போதையில் இருந்து தெளிய காலதாமதமாகும். இயற்கையாகவே பெண்கள் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைந்திருப்பதால், போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.

எளியது ஆபத்து

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பாஸ்வேர்டை எளியதாக தேர்வு செய்து தவறு செய்துவிடுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட 10 மில்லியன் எளிய பாஸ்வேர்டுகள் பொதுத்தளத்தில் கசிந்திருக்கிறதாம். இதனால் இணையம் தொடர்பான குற்றங்கள் பெருக வழிவகுக்கின்றன. எளிமையான பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் மிக எளிதாக திருட வழிவகை செய்யும்.

பிராணாயாமம்

நாம் மிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது. இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து உடலின் எடையைக் குறைத்துவிடும்,

கண் எரிச்சல்

கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண்ணெரிச்சலை போக்க, வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் எடுத்து, பின் தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விட்டு, குளித்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.