முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கடல் மட்டம் உயரும் அபாயம்

Image Unavailable

ஆர்க்டிக் பிராந்தியத்தில் சராசரியைவிட 20 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பக்காற்று வீசுகிறதாம். வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியைவிட சுமார் 5 டிகிரி செல்சியஸ்வரை அதிக வெப்பம் இருக்கும். இந்த முறை அது 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற அரிதான நிகழ்வுகள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வடதுருவத்தின் கடல் பகுதியிலும், நிலப் பகுதியிலும் மூடியிருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்