முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காட்டுத் தீயிலிருந்து 100 கோலா கரடிகளை காப்பாற்றிய நாய்க்கு சர்வதேச விருது

Image Unavailable

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயிலிருந்து 100 கோலா கரடிகளை மீட்க உதவிய துணிச்சலான நாய்க்கு சர்வதேச விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் காட்டுத் தீ பரவியது. இதில் ஏராளமான மரங்கள், செடிகள், கொடிகள் கருகியதுடன், பறவைகள், விலங்குகளும் பாதிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட அரிய வகை விலங்கான கோலா கரடிகளை மீட்கும் பணியில் சிறப்பு குழுவினர் ஈடுபட்டனர். இதில் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களுடன் இணைந்து  பயிற்சி பெற்ற நாய் ஒன்றும் அவர்களுக்கு இணையாக தீரமாக போராடி உதவியது. பீர் (Bear) எனப் பெயரிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியன் கூலி இன நாய்தான் இந்த வீர சாகசத்துக்கு சொந்தக்காரி.  இதற்காக ஆஸ்திரேலியாவின் Sunshine Coast பகுதியில் அமைந்திருக்கும் University of the Sunshine Coast பல்கலை கழகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீர தீர சாகசத்தை புரிந்த பீருக்கு International Fund for Animal Welfare என்ற சர்வதேச விலங்குகள் தன்னார்வ அமைப்புதான் விருது வழங்கி கவுரவித்துள்ளது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இந்த நாய் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்