Idhayam Matrimony
முகப்பு

தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்

Image Unavailable

இந்தியாவைப் பற்றி பேசினால், உலகிலேயே அதிக வாழைப்பழம் (Banana) உற்பத்தி செய்யும் நாடு. இங்கு சுமார் 4.5 லட்சம் ஹெக்டேரில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 180 லட்சம் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகில் காணப்படும் 300 வகையான வாழைப்பழங்களில் சுமார் 30-40 வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. செவ்வாழை பழம் உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்த எண்ணற்ற பல மருத்துவ குணங்களை கொண்டது.  செவ்வாழையில் பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, தொலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.  நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் 1 முறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.

தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர்  கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago