- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலி கட்டிய திருவிளையாடல்
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் பச்சை குதிரையில் பவனி
- திருச்சேறை சாரநாதர் பரமபதநாதர் திருக்கோலம்
- பழனிஆண்டவர் உற்சவாரம்பம்
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சூர்ய பிரபையில் பவனி
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, விருசப வாகனத்தில் வீதிவுலா
கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி
கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி
கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி நடந்தது.
கொடைக்கானலில் தற்போது கோடை விழா நடைபெற்று வருகின்றது. பல துறைகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. கொடைக்கானல் கால் நடை பராமரிப்புத்துறை சார்பில் பிரையண்ட் பூங்காவில் நாய்கள் கண்காட்சி நடந்தது.
இந்த நாய்கள் கண்காட்சியில் பல வகையான 75 நாய்கள் கலந்து கொண்டன. பெரிய வகை நாய்கள் சிரிய வகை நாய்கள், குட்டி நாய்கள் என்று போட்டிகள் நடத்தப்பட்டது. நாய்கள் நன்கு பராமரிக்கப்பட்டு உள்ளனவா, அதன் உடல் அமைப்பு, கட்டளைக்கு கீழ்படிதல் உள்ளிட்டவைகளின் படியும் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் கொடைக்கானல் சக்திவேலின் ஜெர்மன் செப்பர்டு நாய் சேம்பியன் பட்டத்தையும், ஜான்பீட்டரின் ஜெர்மன் செப்பர்டு நாய், சுகனின் ஜெர்மன் செப்பர்டு நாய் இரண்டும் முதல் பரிசு பெற்றது. வினோத்தின் ஜெர்மன் செப்பர்டு இன பப்பி நாய், சுமனின் பிட்புல் ரக நாய், அருண்பிரகாசின் லேப்ராடார் நாய், டயானாவின் பக் இன நாய்களும் பரிசுகளை பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கொடைக்கானல் டி.எப்.ஓ டாக்டர் முருகன் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் கால்நடைபராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் ஹக்கீம் தலைமையில் கால்நடைத் துறையினர் செய்திருந்தனர்.