நகுல்-சாந்தனு இணையும் `நண்பா-2' இடியட்ஸ்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      சினிமா

 

சென்னை, பிப்,20

முத்து மூவிஸ் வழங்க அங்கை சினி ஆர்ட்ஸ் டாக்டர் டி.ஜீவகன் தயாரிப்பில், தொட்டாசிணுங்கி....

சொர்ணமுகி, ப்ரியசகி, தூண்டில் ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழில் கே.எஸ்.அதியமான் இயக்கும் அடுத்த படமாக பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது `நண்பா'.

முதல் முறையாக நகுலும், சாந்தனுவும் இணைந்து நடிக்க, இளமைத்துள்ளும் நாயகியாக அறிமுகமாகிறார் நிகிஷா பட்டேல். தெலுங்கில் பவன்கல்யாண் ஜோடியாக புலி படத்தில் நடித்தவர். லண்டன் பெண்ணான நிகிஷா நண்பா மூலம் தமிழ் உலகுக்கு வருகிறார்.

நகுல்-சாந்தனு நண்பர்களாக நடிக்கின்றனர். நட்புக்கு நடுவே ஒருவரையொருவர் சார்ந்த குணாதிசயம் வலுவாக விளையாட அடுத்து என்ன நிகழ்கிறது என சுவாரஸ்மான திரைக்கதையுடன் பரபர படமாக உருவாகிறது.

நண்பா படபிடிப்பு முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவின் ஃபிஜி தீவுகளில் தொடங்கி நடைபெறுகிறது. நகுல், சாந்தனு, தீபா நரேந்திரா மற்றம் பிஜி தீவுகளில் உள்ள இந்திய நடிகர்களும் நடிக்கின்றனர். ஃபிஜி தீவுகளில் முதல் முறையாக படமாக்கவிருக்கும் முதல் இந்திய திரைப்படம் நண்பா என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ்மேனன் அசோசியேட்டான ராம் குணசேகரன் ஒளிப்பதிவைக் கவனிக்க, ஜெயம், சம்திங் சம்திங், வெண்ணிலா கபடிக்குழு ஆகிய படங்களின் கலை இயக்குனரான ஆனந்தன் கலையைக் கையாள, சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சிவாவும், நடனத்தை தினேஷூம் அமைக்க, முன்னணி இசைக்கலைஞரிடம் இசையமைக்க பேசி வருகின்றனர். எடிட்டிங்கை ராம்ப் கவனிக்கிறார். இணைந்து தயாரிக்கின்றார்கள் ராஜா, கே.தமிழரசன், தயாரிப்பு அங்கை சினி ஆர்ட்ஸ் டாக்டர் டி.ஜீவகன், கதை. திரைக்கதை, வசனம், இயக்கம் கே.எஸ்.அதியமான்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: