முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை ​- அச்சுதானந்தன்

செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

பாலக்காடு,மார்ச்.22 - நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வரும் இடது கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவருமான அச்சுதானந்தன் உறுதி கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலோடு கேரள மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைமையிலும் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இடது கம்யூனிஸ்ட் சார்பாக முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த பினராய் விஜயன் ஆகியோர்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது. பின்னர் அச்சுதானந்தனுக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் போராடியதால், அச்சுதானந்தனுக்கு போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அச்சுதானந்தன் தனது கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மலப்புழாவில் கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாலக்காடு வந்த அச்சுதானந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மற்றும் கற்பழிப்பு போன்ற செக்ஸ் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் ஒருபோதும் இறக்கம் காட்டமாட்டோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புதிய கேரளாவை உருவாக்குவதே எங்கள் நோக்கம். அதை அடைய கடும் முயற்சிகள் மேற்கொள்ளுவோம். மலப்புழா தொகுதியில் அச்சுதானந்தன் தொடர்ந்து 3-வது முறையாக போட்டியிடுகிறார். முன்னதாக பாலக்காடு வந்த அச்சுதானந்தனுக்கு ரயில் நிலையத்தில் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony