நித்யானந்தா - ரஞ்சிதா விவகாரம்: லெனின் கருப்பன் சரண்

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 - பெங்களூரில் நித்யானந்தர் ஆசிரமத்தில் உதவியாளராக இருந்து பின்னர் ஆபாச சிடி எடுத்து நித்யானந்தரை மிரட்டியதாக அவரது மேலாளர் அளித்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த லெனின் கருப்பன் நேற்று சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் சரண்டைந்தார். இதை யொட்டி போலீசார் அவரை கைது செய்தனர். இது பற்றி விபரம் வருமாறு:- பெங்களூரில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தர். இவரிடம் உதவியாளராக இருந்தவர் லெனின் கருப்பன். ஒருகட்டத்தில் லெனின்  கருப்பனுக்கும் நித்யானந்தருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

நித்யானந்தர் நடிகை ரஞ்சிதா படுக்கையறையில் ஒன்றாக இருந்த காட்சிகளை தான் எடுத்து வைத்துள்ளதாகவும் அதை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியதாகவும் கூறப்பட்டது.

ஒரு கட்டத்தில் நிதியானந்தா ரஞ்சிதா படுக்கையறை காட்சிகளை சன்டிவி ஒளிபரப்பியது. மறுநாள் அதன் நாளிதழிலும் நக்கீரன் வார இதழிலும் படுக்கை அறைக்காட்சிகள் காட்டப்பட்டது.

இதை யொட்டி நித்யானந்தர் தலைமைறைவானார். அவரது ஆசிரமங்கள் தாக்கப்பட்டது.

ஆட்சி இதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நித்யானந்தா செய்தியாளர்களை சந்தித்தார்.

தன்னை எவ்வாரெல்லாம் பணம் கேட்டு மிரட்டினர் என்று தெரிவித்தார்.

ஆபாச படகேசட் வெளியிட்டு மிரட்டல் விடுத்தாக பண் கேட்டு மிரட்டியதாக மேனேஜர் பிரபானந்தா என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் லெனின் கருப்பன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. தன்னை போலீசார் தேடுவதை அளித்து உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு லெனின் கருப்பன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவும்  தள்ளுபடி ஆனது.

இதையடுத்து நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன் லெனின் கருப்பன் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் லெனின் கருப்பன் கைது செய்யப்பட்டார்.

லெனின் கருப்பன் வாக்குமூலம் அடிப்படையில் முக்கிய புள்ளிகள்  மீது பிடி இறுகும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: