முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் கம்யூ. - காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல்

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச். 26 - மதுரையில் மார்க்சிய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக ஆகியவை நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்து விட்டன. நேற்று மதுரை தெற்குதொகுதி மார்க்சிய கம்யூனிஸ்ட் வேட்பாளர் இரா.அண்ணாதுரை மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் தொகுதி தேர்தல் அலுவலர் ஆறுமுக நயினாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின் போது நன்மாறன் எம்எல்ஏ, எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜெயபால், தேமுதிக துணை செயலாளர் குகன், இடது கம்யூனிஸ்ட் பகுதி செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். மதுரை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரன் மாநகராட்சியில் உள்ள தொகுதி தேர்தல் அலுவலர் முருகேசனிடம் மனு தாக்கல் செய்தார்.

    மதுரை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வரதராஜன் கிழக்கு மண்டலத்தில் உள்ள தொகுதி தேர்தல் அலுவலர் ஆறுமுகநயினாரிடம் மனு தாக்கல் செய்தார். திருப்பரங்குன்றம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுந்தர்ராஜன் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முருகையாவிடம் மனு தாக்கல் செய்தார். தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தும் மனு தாக்கல் செய்து விட்டன. இன்று மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony