எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.நா., ஏப்.26 - சர்வதேச விவகாரங்களில் இந்தியா மகத்தான பங்காற்ற வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த வருகைக்கு முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், சர்வதேச விவகாரங்களில் இந்தியா மாபெரும் பங்களிப்பை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக அரபு நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டுவர இந்தியா ஒரு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவுடன் வலுவான நட்புறவை கொண்டுவரும் நோக்கத்தில்தான் தான் இந்தியாவுக்கு செல்ல இருப்பதாக அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பலமான பங்களிப்பு நாடாகவும், தகுதி வாய்ந்த நாடாகவும் இந்தியா இருக்கிறது. எனவே இந்தியாவின் பங்களிப்பு ஐ.நா.வுக்கு அவசியமாக உள்ளது என்றும் அவர் கூறினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியா உலக விவகாரங்களில் மகத்தான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அரபு நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மை சீர்குலைந்துள்ளது. அங்கு ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. வடக்கு ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது. இந்த நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உதவிசெய்ய இந்தியா முன்வர வேண்டும். ஜனநாயகத்தில் தனக்குள்ள அனுபவங்களை இந்த நாடுகளுடன் இந்தியா பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்தியாவுக்கும் ஐ.நா.வுக்கும் இடையை உள்ள பங்குப்பணிகள் தற்போது மிகச் சிறப்பாக உள்ளது. ஆனால் இந்த பங்குப்பணிகள் மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. விரும்புகிறது. அதற்காகத்தான் நான் இந்த இந்தியப் பயணத்தையே மேற்கொள்ள இருக்கிறேன்.
பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றுவரும் இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் முக்கிய பங்காற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


