முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் தீர்வையே இலங்கை தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 28 - இலங்கை தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவல் என்ற அடிப்படையிலான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றனர் என இலங்கையில் பல்வேறு தரப்பினர் கூறிய கருத்தையே மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் வெளிப்படுத்தினார் என்று மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை சென்ற இந்திய எம்.பிக்கள் குழுவில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் சுற்றுப்பயணம் முடிந்து திரும்பியதும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், 

இலங்கை தமிழர் அமைப்புகளும், பொதுமக்களும் தனி ஈழம் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. மாறாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகார பரவல் என்ற அடிப்படையில் அரசியல் தீர்வையே எதிர்பார்க்கிறோம் என்று பல்வேறு தரப்பினரின் கருத்தையே சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய டி.கே. ரங்கராஜன் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இந்த கருத்துதான் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதை தெளிவுபடுத்தி உள்ளார். இலங்கை சென்ற எம்.பிக்கள் குழுவிடம் இதே கருத்தைத்தான் அவர் வலியுறுத்தி உள்ளார். 

மார்க்சிஸ்ட் கட்சி சென்னையில் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பதைத்தான் வலியுறுத்தினார். மேலும் இந்த கூட்டமைப்பு அதிகார பரவல் குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்தவொரு பிரச்சினையிலும் சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்தோட்டம் என்ன என்பதே முதன்மையானது என்று ராமகிருஷ்ணன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்