முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணமடைந்த விவசாய குடும்பத்திற்கு நிதியுதவி

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.28 - சாலை விபத்தில் உயிரிழந்த விவசாய குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1லட்சம் நிதி உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- திருவள்ளூர் மாவட்டம்,  அம்பத்தூர் வட்டம், ஆவடியிலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் கீழ்மங்களம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மீது மாநகர அரசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

இச்சாலை விபத்தில் அகால மரணமடைந்த  கணேசன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் காலமான  கணேசனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்