சென்னையில் சினேகா ​பிரசன்னா திருமணம்

Image Unavailable

சென்னை, மே.12 - சென்னையில் நேற்று  சினேகா​பிரசன்னா திருமணம் நடந்தது . விரும்புகிறேன்  படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சினேகா. ஆனந்தம் படம் அவரை பிரபலப்படுத்தியது. கமல் ஜோடியாக வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் நடித்தார். ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு nullக்களுமே சொல்கிறதே என சினேகா பாடிய பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. உன்னை நினைத்து, பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், பம்மல் கே. சம்பந்தம், ஜனா, போஸ், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம் என பல படங்களில் நடித்துள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னா ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பிரசன்னா அழகிய தீயே படத்தில் அறிமுகமானார். சாது மிரண்டா, சீனா தானா, கண்ணும் கண்ணும், நாணயம், அஞ்சாதே, முரண் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  சினேகா, பிரசன்னா காதலை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர். திருமணத்துக்கும் சம்மதம் தெரிவித்தார்கள். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயமானது. சினேகா, பிரசன்னா திருமணம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில்  நேற்று  காலை 9.30 மணிக்கு நடந்தது. சினேகா காஞ்சிபுரத்தில் இருந்து வாங்கிய மெருன் கலர் முகூர்த்த பட்டுப்புடவையை உடுத்தி இருந்தார். பிரசன்னா பட்டு வேட்டி அணிந்து இருந்தார்.   புரோகிதர்கள் மந்திரம் ஓத இரண்டு தடவை சினேகாவுக்கு பிரசன்னா தாலி கட்டினார். சினேகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவர் குடும்ப வழக்கப்படி முதல் முகூர்த்தம் நடந்தது. பின்னர் பிரசன்னா குடும்பத்தினருக்காக பிராமண வழக்கப்படி முகூர்த்தம் நடந்தது. அப்போது சினேகா மடிசார் சேலை உடுத்தி இருந்தார். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். நடிகர், நடிகைகள், திரையுலக பிரமுகர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வாழ்த்தினர். நடிகர் விஜய்குமார், நந்தா, சிபிராஜ், வைபவ், நடிகைகள் மஞ்சுளா, டைரக்டர்கள் சேரன், ஹரி, இசை அமைப்பாளர் கங்கை அமரன், எடிட்டர் மோகன், நளினி சிதம்பரம் போன்றோர் நேரில் வாழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ