எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மே.31 - அனைத்து திருச்சபைகளும் இணைந்து நடத்தும் அற்புத பெருவிழா மதுரையில் 3 நாட்கள் நடக்கிறது. அற்புத பெருவிழாவின் செயலாளர் ஐசக்ரத்தினராஜ், ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜெயபால் ஆகியோர் கூறியதாவது, அனைத்து திருச்சபைகளின் சார்பில் மதுரை கே.புதூர் மூன்றுமாவடி சிஎஸ்ஐ மைதானத்தில் அற்புத பெருவிழா என்ற மாபெரும் நற்செய்தி கூட்டம் வருகிற 1,2, 3 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 10மணிக்கு முடிவடைகிறது. இந்த அற்புத பெருவிழாவில் சகோ. ஆபிரகாம் சார்லஸ் என்ற உலக பிரசித்தி பெற்ற நற்செய்தியாளர் அற்புத செய்தி வழங்க உள்ளார்.
சகோ.ஆபிரகாம் சார்லஸ் தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவராவார். இவர் குணமளிக்கும் வரம் பெற்ற வல்லமையான இறை ஊழியராவார். இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளுக்கும் இது வரையில் சுமார் 25 நாடுகளில் அழைக்கப்பட்டு இறை ஊழியத்தின் வழியாய் ஜாதி, மத, இன பேதமின்றி லட்சக்கணக்கான மக்கள் நோய்களிலிருந்து விடுதலையும் மகிழ்ச்சியும் பெற்றுள்ளனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற அற்புத அடையாளங்களை போல், ம்துரையில் நடைபெறவுள்ள அற்புத பெருவிழாவிலும் கடவுளின் வல்லமை விளங்கும் என்பது உறுதி. உலக சமாதானத்திற்காகவும் சிறப்பாக நமது நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்காகவும் மதுரை அற்புத பெருவிழாவில் சிறப்பு பிராத்தனை செய்யப்படும் என்றனர். பேட்டியின் போது, பத்திரை தொடர்பாளர் எம்.எல்.சுந்தரம் உடனிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


