எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழனி, ஜூன். - 5 - பழனி அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. பழனியில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. இத்திருவிழா அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 28 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தம்பதி சமேதராக தந்தப் பல்லக்கு, தங்க மயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்தார். 6 ம் நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமையன்று அருள்மிகு வள்ளி தேவசேனா சமேதர் முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. 7 ம் நாள் நிகழ்ச்சியில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை சண்முக நதியில் தீர்த்தவாரிக்கு தம்பதி சமேதராக சுவாமி எழுந்தருளினார். மாலை 4.20 மணிக்கு அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவில் தேரடியில் தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்ததையும், கோவில் யானை கஸ்தூரி பக்தர்களுக்கு உதவியாக தேரை தள்ளியதும் காண்போரை பரவசப்படுத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர் செல்லும் பாதையில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. வரும் புதன் கிழமை கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. இந்நிகழ்ச்சியில் வேணுகோபாலு எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் வேலுமணி, பழனி கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் மங்கையற்கரசி, சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமார், பிரசாத ஸ்டால் அரிகரமுத்து, நகர்மன்ற துணை தலைவர் முருகானந்தம், சங்கராலயம் பாலசுப்பிரமணிய சுவாமிகள், காண்டிராக்டர் நேரு, நகராட்சி கவுன்சிலர்கள், காணியாளர் நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


