முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பங்களாவை நிராகரித்தார் ராஜ்யசபை உறுப்பினர் சச்சின்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.- 10 - ராஜ்யசபை உறுப்பினர் சச்சின் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை வேண்டாம் என்று கூறிவிட்டார். மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். பிரபல கிரிக்கெட் வீரர் சிறந்து விளையாடி ஏராளமான போட்டிகளில் வெற்றிபெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார். இதை பாராட்டும் வகையில் சச்சினுக்கு ராஜ்யசபை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.  எம்.பி.யாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் டெல்லியில் மத்திய அரசு சார்பாக பங்களா கொடுக்கப்படும். அதேமாதிரி சச்சினுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள சச்சின் மறுத்துவிட்டார். அந்த மாதிரி பங்களாவில் நான் தங்குவது மக்கள் வரிப்பணத்தை வீணாக்துவது போன்றதாகும் என்று சச்சின் கூறியுள்ளார். டெல்லியில் நான் ஒரு சில நாட்கள்தான் தங்கியிருப்பேன். அந்த நேரத்திற்கு மட்டும் அந்த பங்களாவை பயன்படுத்த நான் விரும்பவில்லை. ஒரு சில நாட்கள் மட்டும் தங்குவதற்காக எனக்கு தனிப்பட்ட முறையில் பங்களா தேவையில்லை. அப்படி தங்கினால் கஷ்டப்பட்டு வரிக்கட்டுபவர்களின் பணத்தை நான் வீணடிப்பது போன்றதாகும் என்றும் சச்சின் சமீபத்தல் சி.என்.என்.டி.விக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். நான் டெல்லியில் தங்கியிருக்கும்போது ஓட்டலில்தான் தங்க விரும்புகிறேன் என்றும் அந்த பேட்டியில் சச்சின் மேலும் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்