முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன். 15 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங் கேற்பதற்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனுக்கு செல்வதற்கு முன்பு இந்திய ஹாக்கி அணி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நா டுகளில் விளையாடும். இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் 2012 -ம் ஆண்டிற்கான ஒலி ம்பிக் போட்டி நடக்க உள்ளது. இந்தப் போட்டி ஜூலை மாதம் 27 -ம் தேதி துவங்குகிறது. லண்டனில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் கில் இந்திய அணியும் கலந்து கொள்கிறது. இதில் அதிக அளவில் தடகள வீர ர்கள் பங்கேற்க உள்ளனர். 

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட இந்திய ஹாக்கி அணியும் தகுதி பெற்று உள்ளது. இதற்காக 48 சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்க ளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. 

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங் கேற்க இருக்கும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இந்திய ஹாக்கி அணியின் கேப் டனாக சுனில் ஷெட்ரி அறிவிக்கப்பட்டு இருக் கிறார். 

ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹா க்கி அணியின் இறுதிப் பட்டியலில் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்திய அணி இதுவரை ஒலிம்பி க்கில் 8 முறை தங்கப் பதக்கம் வென்று உள்ளது. 

இந்திய ஹாக்கி அணி இந்த ஆண்டு பி பிரிவில் இடம் பெற்று உள்ளது. இதில் ஜெர்மனி, கொரியா, நியூசிலாந்து, ஹாலந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகளும் இடம் பெற்று உள்ளன. 

இந்தியா பங்கேற்கும் முதல் லீக் ஆட்டம் ஜூலை மாதம் 30 -ம் தேதி நடக்க இருக்கிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஹாலந்து அணியுடன் மோத இருக்கிறது. 

இதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 1-ம் தே தி நியூசிலாந்து அணியுடனும், ஆகஸ்டு 3-ம் தேதி ஜெர்மனியுடனும், 4-ம் தேதி கொரியாவுடனும், 7 -ம் தேதி பெல்ஜி யத்துடனும் மோதுகின்றது. 

அதற்கு முன்னதாக இந்திய அணி பிரா ன்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு அடுத்த மாதம் செல்கிறது. இந்தத் தொ டர் லண்டன் போட்டிக்கு பயிற்சி ஆட்டமாக அமையும் என்று தெரிய வருகிறது. 

பிரான்சில் விளையாடிய பிறகு. இந்தி ய அணி ஸ்பெயினிற்கு செல்கிறது. அங்கு ஸ்பெயின், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஹாக்கி தொடர் நடக்கிறது. அதன் பிறகு, இந்திய ஹாக்கி அணி லண்டனுக்கு செல்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்