Idhayam Matrimony

மகேஷ் பூபதிக்கு 2 ஆண்டு விளையாட தடை?

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், ஜூன். 17- லண்டன் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயசுடன் இணைந்து ஆட மறுப்பு தெரிவித்து உள்ளாதால் மகே ஷ் பூபதிக்கு 2 ஆண்டு காலம் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  லண்டனில் நடைபெற இருக்கும் ஒலி ம்பிக் போட்டியில் விளையாட டென் னிஸ் பிரிவில் இருந்து லியாண்டர் பய ஸ் மட்டுமே தகுதி பெற்று இருக்கிறார். 

இரட்டையர் பிரிவில் டாப் - 10 ல் இட ம் பெற்றவர்கள் நேரடியாக தகுதி பெறலாம். பயஸ் 7-வது இடத்தில் இருப்ப தால் நேரடி தகுதி பெற்று இருக்கிறார். 

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயசுடன் இணைந்து மகே ஷ் பூபதி இரட்டையர் பிரிவில் ஆடு வார் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது. 

மகேஷ் பூபதி , பயசுக்கு சிறந்த ஜோடி. கருத்து வேறுபாடுகளை மறந்து ஒலிம் பிக்கில் ஆட வேண்டும் என்று அகில இந்திய டென்னிஸ் சங்க செயலாளர் அனில் கண்ணா தெரிவித்தார். 

அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் இந்த முடிவுக்கு மகேஷ் பூபதி எதிர்ப்பு தெரிவித்து உள்லார். பயசுடன் இணைந் து ஆட மாட்டேன் என்று அவர் அறிவி த்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது - லியாண்டர் பயசுடன் இணைந்து ஆடு ம் எண்ணம் எனக்கு இல்லை. டென்னி ஸ் சங்கத்தின் இந்த முடிவு எனக்கு மோசமான நாளாகும். 

நாங்கள் இருவரும் இணைந்து 4 ஒலிம் பிக் (1990- 2008 ) விளையாடி விட்டோ ம். ஆனால் ஒரு பதக்கம் கூட  பெறவி ல்லை. அப்படி இருக்கும் போது, அவ ருடன் இணைந்து விளையாட சொல்வ து சரிதானா? 

நான் ரோகன் பொபண்ணாவுடன் இணைந்து விளையாட ஏற்கனவே விரு ப்பம் தெரிவித்து இருந்தேன். அப்படி இருந்தும் டென்னிஸ் சங்கம் இந்த முடி வு எடுத்துள்ளதன் மூலம் அரசியல் நாட கம் நடத்துகிறது. 

பயசுடன் இணைந்து விளையாட இள ம் வீரரை தேர்வு செய்து இருக்கலாம். இரட்டையர் பிரிவில் 2 அணியை அனு ப்பலாம். அதற்கான காலம் இன்னும் இருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்தி ய விளையாட்டு அமைச்சகம் தலையி ட வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார். 

மகேஷ் பூபதியின் இந்த முடிவு காரண மாக அவர் மீது அகில இந்திய டென் னிஸ் சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடு க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயசுடன் விளையாடாவிட்டால் 2 ஆண்டு தடை விதிப்போம் என்றும் எச்சரித்து இருந்தது. 

இதனால் அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தடையை சந்திக்க தயார் என்று மகேஷ் பூபதி அறிவித்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago