முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கக்கன் சிலைக்கு கலெக்டர் - எம்எல்ஏக்கள் மாலையணிவித்து மரியாதை

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.- 19 -  தியாகசீலர் கக்கனின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு கலெக்டர் அன்சுல்மிஸ்ரா மற்றும் எம்எல்ஏக்கள் தியாகசீலர் கக்கனின் திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.  மதுரை மாவட்ட செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட தியாகசீலர் கக்கனின்  104வது பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் வட்டம் தும்பைபட்டி ஊராட்சியில் உள்ள தியாகசீலர் கக்கனின் மணிமண்டபத்தில் தியாகசீலர் கக்கனின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அன்சுல்மிஸ்ரா, எம்எல்ஏக்கள் மேலூர் ஆர்.சாமி,  கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா ஆகியோர்  தியாகசீலர் கக்கனின் திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.  அதன்பின்னர் மணிமண்டபத்தில் தியாகசீலர் கக்கனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டனர். தியாகி கக்கன் அவர்களின் மூத்த மகன் திரு.பாக்கியநாதன் மற்றும் இவரது துணைவியார் திருமதி.சரோஜினிதேவி, தியாக சீலர் கக்கன் அவர்களின் சகோதரர் திரு.வடிவேலு, திரு.புபைதிகக்கன் உள்ளிட்ட தியாக சீலர் கக்கன் அவர்களின் குடும்பத்தினரும் திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஜபார், மேலூர் வட்டாட்சியர் முருகானந்தம், கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பாண்டீஸ்வரிபாண்டி, மேலூர் கிழக்கு ஒன்றிய துணைத்தலைவர் கார்த்திகேயன், மேலூர் நகர்மன்றத்தலைவர் எஸ்.சரவணன், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், தும்பைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் லதாஇளங்கோ, மாவட்ட கவுன்சிலர் அம்பலம், ஒன்றிய கவுன்சிலர் புங்ைகொடிமணவாளன், வாசுகிசின்னக்கருப்பன் உள்ளிட்ட  அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தியாக சீலர் கக்கனின் திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!