முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் லியாண்டருடன் ஜோடியா? சானியா அதிருப்தி

வியாழக்கிழமை, 28 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன். 28 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலப் பு இரட்டையர் பிரிவில் லியாண்டருட ன் ஜோடி சேர்வதற்கு நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா அதிருப்தி தெரிவித்து உள்ளார். இந்தப் பிரச்சினையில்அகில இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு சானியா கண்ட னம் தெரிவித்து இருக்கிறார். தன்னை கவர்ச்சி பதுமையாக கருதுவதா என்று ம் அவர் கூறியிருக்கிறார். 

இங்கிலாந்தில் தற்போது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடந்து வருகிறது. தற்போது இந்தப் போட்டி காலிறுதியை நோக்கி முன்னேறி வரு கிறது. 

இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் லண்டன் ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கிறது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. 

லண்டன் ஒலிம்பிக்கில் டென்னிஸ் இர ட்டையர் பிரிவில் லியாண்டருடன் ஜோடி சேர்ந்து ஆட மகேஷ் பூபதி மற் றும் ரோகன் பொபண்ணா ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். 

இதனால் ஜூனியர் வீரரான விஷ்ணு வர்த்தனை பயசுக்கு பார்ட்னராக ஆட டென்னிஸ் சங்கம் முடிவு செய்தது. இத ற்கு மூத்த வீரரான லியாண்டர் கண்ட னம் தெரிவித்தார். 

எனவே அவரை சமாதானம் செய்வதற் காக லண்டன் ஒலிம்பிக்கில் கலப்பு இர ட்டையரில் சானியா மிர்சா ஜோடி செ ர்ந்து ஆடுவார் என்று சங்கம் கூறியது. 

ஆனால் சானியா மிர்சா இதற்கு கண்ட னம் தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபனில் சானியா மற் றும் பூபதி ஜோடி கலப்பு இரட்டையரி ல் பட்டம் வென்றது. 

எனவே பூபதி தான் தற்போதைய நிலையில் தனக்கு சரியான ஜோடி என் றும், பயசுடன் இணைந்து ஆடுவதற்கு அவர் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். 

மேலும் தன்னை கவர்ச்சி பதுமையாக கருதுவதா என்றும் சானியா ஆவேச மாக அகில இந்திய டென்னிஸ் சங்கத் திற்கு தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். 

தவிர, லண்டன் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் தான் தன

க்கு சரியான ஜோடி என்று அகில இந்தி ய டென்னிஸ் சங்கம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இது ஒரு தவறான முடிவு என்றும் அவர் கூறியி ருக்கிறார். 

ஆனால் இதற்கு அகில இந்திய டென் னிஸ் சங்கம் பதில் கூறி இருக்கிறது. தகுதி அடிப்படையிலேயே சானியா , பயசுடன் இணைந்து ஆட தேர்வு செய்யப்பட்டார் என்றும் இதன் மூலமே சா னியா இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவில் ஆட ஒயில்டு கார்டு பெற்றார் என்றும் குறிப்பிட்டு உள்ளது. 

தவிர, விஷ்ணுவர்த்தன் ஆசிய போட்டி யில் பதக்கம் வென்ற வீரர் என்றும் பூப தி மற்றும் ரோகன் இருவரும் லியாண்டருடன் இணைந்து ஆட மறுத்ததால் கடைசி நேரத்தில் அவர் தேர்வு செய்ய ப்பட்டார் என்றும் சங்கம் சார்பில் விடு க்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. 

தவிர, கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் மற்றும் சானியா ஜோடி நல்ல இணை என்றும் இருவரும் இணைந்துஆடி பதக்கம் பெற்றுத் தரு வார்கள் என்றும் சங்கம் நம்பிக்கை தெ ரிவித்து உள்ளது. 

மேலும் இந்திய வீரர்கள் தங்களிடை யே நிலவி வரும் கருத்து வேறுபாடுக ளை மறந்து, ஒருங்கிணைந்து ஆடி பத க்கம் வென்று நாட்டிற்கு கெளரவத்தை ஏற்படுத்தித் தருமாறு டென்னிஸ் சங்க ம் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago