முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் போட்டி அணி தேர்வு: மகேஷ் பூபதி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 29 -  ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கான வீரர்கள் தேர்வில் சானியாவிடம் ஆலோசிக்காமல் கலப்பு இரட்டையர் பிரிவில் அணி தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்று மகேஷ் பூபதி குற்றஞ் சாட்டி இருக்கிறார். லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான டென்னிஸ் அணி தேர்வு சர்ச்சை நீடித்து வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸ் இரட்டையர் பிரிவி ல் நேரடி தகுதி பெற்றார். 

அவருடன் ஜோடி சேர மகேஷ் பூபதி மற்றும் பொபண்ணா இருவரும் மறுத் ததால் இந்திய டென்னிஸ் சங்கம் இர ண்டு அணிகளை தேர்வு செய்தது.

மூத்த வீரரான லியண்டர் பயசுடன் இளம் வீரரான விஷ்ணுவர்த்தன் ஜோடி யாக ஆடுவார் என்றும், மகேஷ் பூபதி மற்றும் பொபண்ணா இருவரும் மற்றொரு ஜோடியாக ஆடுவார்கள் என்றும் டென்னிஸ் சங்கம் அறிவித்தது. 

அதே நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயசுடன் இணைந்து சானியா மிர்சா ஆடுவார் என்றும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் தெரி வித்தது. 

இதற்கிடையே நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சாவுக்கு கடந்த 2 நா

ட்களுக்கு முன்பு தான் ஒலிம்பிக்கில் விளையாட ஒயில்டு கார்டு கிடைத் தது.   

அப்போது அவர் டென்னிஸ் சங்கத்திற் கும், லியாண்டர் பயசுக்கும் தனது கண்டனத்தை தெரிவித்தார். பயசுக்காக தா ன் பலிக்கடா ஆக்கப்பட்டதாக அவர் ஆவேசமடைந்தார். டென்னிஸ் சங்கம் தன்னை இழிவுபடுத்தி விட்டதாகவும் அவர் கூறி இருந்தார். 

இதற்கு டென்னிஸ் சங்கம் பதில் அளித் தது. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு திறமையின் அடிப்படையில் வீரர்கள் தே ர்வு செய்யப்பட்டதாக கூறி இருந்தது. 

இந்த விவகாரத்தில் சானியா மிர்சாவு க்கு ஆதரவாக மகேஷ் பூபதி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பா க அவர் கூறியதாவது - 

கலப்பு இரட்டையர் பிரிவில் யார் சிறந்த ஜோடி என்பதை சானியாவிடம் கலாந்து ஆலோசிக்காமல் அவர் பெ யர் வெளியிடப்பட்டு உள்ளது. 

நானும், சானியாவும் இணைந்து கலப் பு இரட்டையர் பிரிவில் சிறப்பாக ஆடி வருகிறோம். சமீபத்தில் முடிவடைந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் சாம்பிய ன் பட்டைத் கைப்பற்றி இருக்கிறோம். 

இது தொடர்பாக சானியா தெரிவித்த கருத்து சரியானதே. என்னைப் பொறுத் தவரை கலப்பு இரட்டையர் பிரிவில் நானும் , சானியாவும் தான் சிறந்த ஜோடி. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago