முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் தொடரும் இரவு நேர மின்வெட்டால் ரகளை

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், ஏப்ரல்.1 - திருமங்கலம் நகரில் இரவு, பகல் என நேரம் காலம் பார்க்காமல் மின்வெட்டு தொடர்ந்து ஏற்படுகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு மின்தடை காரணமாக இந்தியா-பாக் அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் முடிவை காணமுடியாமல் போனதால் ஆத்திரம் அடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் வீதியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டனர்.

தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகம் காரணமாக தமிழகம் முழுவதிலும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் திருமங்கலம் நகரில் காலையில் 3 மணிநேரம் அறிவிக்கப்பட்ட மின்தடை, பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்தடை இரவு, பகல் பாராமல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வணிக, வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள், 10ம் வகுப்பு தேர்வு எழுதி வரும் மாணவர்கள், அலுவலகங்கள் எந அநைத்து தரப்பினரும் அல்லோகலப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாக் அணிகள் மோதின. இந்த ஆட்டம் டி.வி யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. இந்நிலையில் ஆட்டம் முடிய 5 ஓவர்கள் இருந்த நிலையில் திருமங்கலம் நகர் முழுவதும் திடீரென மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை இரவு 11 மணிக்கு மேலாக நீடித்ததால் ஆட்டத்தின் முடிவை காணமுடியாமல் திருமங்கலம் மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும் கொந்தளிப்படைந்தனர். இதில் ஆத்திரமடைந்த சில ரசிகர்கள் இருளை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வீதிகளில் வந்து பட்டாசு வெடித்தும், காலி பாட்டில்களை வீசி எறிந்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் திருமங்கலம் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே சமயம் குறும்புக்கார கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் தங்களது செல்போனில், கிரிக்கெட் மேட்ச் பார்க்க முடியாமல் போனதற்கு காரணமான தி.மு.க. அரசுக்கு வாக்களியுங்கள் விரைவில் கலைஞர் இலவச மின்வெட்டு திட்டம் வருகிறது என எஸ்.எம்.எஸ் அனுப்பி ஆத்திரத்தை தணித்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்