எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.2 - இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் கொள்ளையனே வெளியேறு போராட்டம் நடக்கிறது என்று ஜெயலலிதா ஆவேசமாக கூறினார். கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், 5 ஆண்டுகளாக தமிழக மக்கள் அடைந்த வேதனைகளையும்சென்னை பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பட்டியலிட்டார்.
மேலும், வன்முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங்கட்சி கவுன்சிலர்களில் பெரும்பாலானோர் ரவுடிகளாக உள்ளதால், மக்கள் படும் வேதனைகளையும் எடுத்துரைத்தார். இதற்கு மாற்றம் காண, நல்லாட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டுமென்று பொதுமக்களை ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் நேற்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரச்சாரம் செய்தார்.
நேற்று பகல் 2.15 மணியளவில் போயஸ் தோட்டத்திலிருந்து பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை ஆதரித்து, நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் பிரச்சாரத்தை துவக்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கருணாநிதியோ தி.மு.க - அ.தி.மு.க. சாதனைகளை ஒப்பிட்டு, வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். இதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன். எனது ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. சட்டத்தின்முன் எல்லோரும் சமம் என்று நீதிநிலைநாட்டப்பட்டு, பாதுகாப்பு அளித்து, ரவடித்தனத்தை முற்றிலும் ஒழித்தேன். இன்று காவல் துறை ரவுடிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
சென்னை மாநகரம் கதிகலங்கி, அமைதியற்ற நகரமாகியுள்ளது. இன்றைய தி.மு.க. கவுன்சிலர்கள் பெருமளவில் ரவுடிகளாக உள்ளார்கள். இவர்கள் உங்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல. வன்முறையின் மூலம் வெற்றிப்பெற்ற தி.மு.க. கவுன்சிலர்களால் நீங்கள்படும் வேதனையை அறிவேன்.
சட்ட கல்லூரி மாணவர்கள் மோதலில் போலீசார் வேடிக்கை பார்த்தது, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தமிழக காவல் துறை முன்னிலையில் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டனர்.
பத்திரிகை ஊழியர்கள் மூன்று பேர் பலியான சம்பவம், தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற நிறைய சட்ட ஒழுங்கு சீர்ழிவு அதிகம் அதற்கு, ஒருசில எடுத்துக்காட்டுதான் இது. சினிமாவில் வரும் வன்முறை காட்சி நிஜமாகவே நடக்கிறது. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்ழிந்து கொண்டிருக்கிறது.
அடுத்த பிரச்சனை மின்வெட்டு, எனது ஆட்சிக்காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைத்தது. மின்சாரம் சீராக வந்தது. உபரி மின்சாரம் பிறமாநிலங்களுக்கு விற்கப்பட்டு, வருவாய் லாபம் ஈட்டப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்வெட்டு அமுலில் உள்ளது. தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களிடம் கை ஏந்தவிட்டார் கருணாநிதி. தேவைக்கு அதிகமாக நிலகரியை இறக்குமதி செய்து, அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார் கருணாநிதி. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். எனது ஆட்சிக்காலத்தில் கடத்தல், பதுக்கல் தடுக்கப்பட்டது. விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இன்றைய நிலைமை தலைகீழாக உள்ளது. கடத்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்று விலை உயர்வால், மக்கள் செய்வது அறியாமல் திண்டாடி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், கடந்த 5 ஆண்டுக்காலமாக மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறீர்கள். தமிழகம் எனது ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்தது. மின்மிகை மாநிலமாக இருந்தது. புதிய வீரானம் திட்டம் மூலம் உங்கள் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு வித்திட்டேன். குடிநீர் பிரச்சனையை தீர்த்து, உங்களது பிரச்சனைகளை தீர்த்தேன். எனது ஆட்சியோடு, கருணாநிதியின் ஆட்சியின் வேதனையை ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள்.
இந்த தேர்தல் வெறும்ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்கள் இந்த ஆட்சியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணைத்தொட்டுவிட்டது. அரிசி கடத்தல், மணல் கொள்ளை, இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் உயர்ந்து விட்டது. 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி குறையவில்லை. அரிசி விலை 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. துவரம்பருப்பின் விலை 90 ரூபாய். புளியின் விலை 110 ரூபாய். ஒரு கிலோ பூண்டு 250 ரூபாயாக உயர்ந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை அமோகமாக நடந்துள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கிரானைட் ஊழல் மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒரு லோடு மணல் விலை ரூ.2500-லிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.150-லிருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல்லின் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. மின்வெட்டை தடுக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் உள்ளது. ஜவுளித் தொழில் நசிந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டது. தமிழகத்தை ரவுடிக் கும்பல் அடக்கி ஆள்கிறது. காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். எல்லாத் துறைகளிலும் ஊழல் தி.மு.கஆட்சியில் பெருகிவிட்டது.
தமிழக அரசின் கடன் தொகை ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளது கருணாநிதி குடும்பம். மக்கள் பணத்தை கோடி கோடியாக கருணாநிதி குடும்பம் சுரண்டிவிட்டது. காலாவதியான மருந்து விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். இப்படியெல்லாம் மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் மக்களின் அவலம், திண்டாட்டம் பெருகிவிட்டது. ஏழைமக்களின் நிலம் அடிமாட்டு விலைக்கு தி.மு.க கும்பல் வாங்கிவிட்டது. ரியல் எஸ்டேட் துறை கருணாநிதியின் குடும்பத்திடம் சிக்கித் தவிக்கிறது. திரைப்படத்துறை கருணாநிதியின் குடும்பத்துறையாக மாறிவிட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எற எண்ணம் கருணாநிதிக்கு அடியோடு இல்லை. கபட நாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதிக்கு மக்கள் பிரச்சனையை தீர்க்க வக்கில்லை. அனைத்து நிலங்களும் கருணாநிதி குடும்பத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கருணாநிதி குடும்பத்தினர் பிடியில் சிக்கி சின்னாபின்னாமாகிவிட்டது. மைனாரிட்டி தி.மு.க ஆட்சியால் தலைக்குனிவிற்கு தமிழகம் ஆளாகிவிட்டது. தமிழ்நாட்டில் இருந்து கருணாநிதி குடும்பத்தினரை விரட்டி அடிக்க வேண்டும்.
கருணாநிதிக்கு சொத்து குவிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். ஆசிய பணக்காரர்களில் ஒருவராக வந்துவிட்ட பி ன் உலக பணக்காரர்களில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கருணாநிதி இருக்கிறார். தமிழக மக்களே நீங்கள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்றபிரச்சனைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள். ரவுடிகளின் அட்டகாசத்தால் நீங்கள் சிக்கியிருக்கிறீர்கள். கடந்த 5 ஆண்டுகாலமாக ஒரு குடும்பம் வாழ்கிறது. ஆறு கோடி குடும்பங்கள் வாழ தமிழக மக்கள் எம்.ஜிஆரின் பொற்கால ஆட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக 1 லட்சத்து 80 கோடி கருணாநிதி கடந்த 5 ஆண்டு காலத்தில் இமாலய ஊழல் சாதனை புரிந்துள்ளார். இந்த பிரச்சனையால் சிறுபான்மையை சேர்ந்த சாதிக் பாஷா உயிர் பறிக்கப்பட்டது. தலித்தின ராசா சிறையில் இருக்கிறார். ஆனால் கருணாநிதி குடும்பம் ஊழல் இல்லை என்று மக்களை ஏமாற்றி சாதனை சாதனை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். தமிழக மக்களே. கடந்த 1942-ம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் வெள்ளையனை வெளியேறு, போராட்டம் நடந்தது. இப்போது தமிழகத்தில் என் தலைமையில் கொல்லையனே வெளியேறு போராட்டம் நடக்கிறது. தேர்தல் நாள் அன்று ஜனநாயக கடமையாற்ற அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறவேண்டும். கருணாநிதி தமிழக மக்களை விரட்டி, தமிழகத்தை தன் குடும்பம் வசம் ஆக்கிவிட நீங்கள் விடாதீர்கள். இந்த தேர்தலில் நீங்கள் அவர்களை விரட்டி அடிக்கவேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோகுலஇந்திரா, அம்பத்தூர் வேட்பாளர் வேதாச்சலம், பொன்னேரி தொகுதி வேட்பாளர் பொன்.ராஜா, மாதவரம் தொகுதி வேட்பாளர் மூர்த்தி, கும்மிடிப்பூண்டி தே.மு.தி.க. வேட்பாளர் சேகர், மதுரவாயல் பீமாராவ், வில்லிவாக்கம் வேட்பாளர் ஏ.சி.டி.பிபாகரன், எழும்பூர் தே.மு.தி.க. வேட்பாளர் செந்தில் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரம்: பெலாரஸ் எல்லையை மூடிய லித்துவேனியா
15 Nov 2025வில்னியஸ், தங்கள் எல்லைக்குள் மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரத்தை அடுத்து பெலாரஸ் எல்லையை மூடியது லித்துவேனியா.
-
நைஜீரியாவில் தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து
15 Nov 2025அபுஜா, நைஜீரியாவில் தொடக்க பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: பா.ஜ.க.வுக்கு முதல்வர் பதவி
15 Nov 2025பாட்னா, தேசிய ஜனநாயக கூட்டணி அசுர பலத்துடன் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
-
பா.ஜ.க.வில் போட்டியிட்டு வெற்றி: பீகாரில் இளம் வயது எம்.எல்.ஏவான நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர்..!
15 Nov 2025பாட்னா, பீகார் மாநில தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு 25 வயதே ஆன நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூர் வெற்றிப்பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.
-
வியட்நாமில் கனமழைக்கு 9 பேர் பலி
15 Nov 2025ஹனோய், வியட்நாமில் கனமழைக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பீகார் சட்டப்பேரவை தோ்தலில் ‘நோட்டா’ வாக்குகள் அதிகரிப்பு
15 Nov 2025பீகார், பீகார் சட்டப்பேரவை தோ்தலில் ‘நோட்டா’ வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 2020-ஆம் ஆண்டு தோ்தலைவிட அதிகரித்துள்ளது.
-
ஊழல், மோசடிகளை தோலுரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு பாராட்டு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
16 Nov 2025சென்னை : ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும் என்றும், தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும
-
விவசாயப்பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்த அதிபர் ட்ரம்ப்
16 Nov 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை வித
-
தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக த.வெ.க. ஆர்ப்பாட்டம்
16 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-11-2025.
16 Nov 2025 -
பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணியா? - துணை செயலாளர் நிர்மல் விளக்கம்
16 Nov 2025சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருபோதும் த.வெ.க. இணையாது என்று கட்சியின் துணை செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியானது
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
-
நமது தேசத்தை பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
16 Nov 2025லக்னோ : நாட்டையும், மதத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயமடைந்தவர்களிடம் 7-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை
16 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
-
சத்தீஷ்கர் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண் : முதல்வர் விஷ்ணு தியோ சாய் தகவல்
16 Nov 2025ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.
-
பீகாரில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க இன்று தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவாரா?
16 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று
-
10-வது முறையாக பீகார் முதல்வராக 19-ம் தேதி பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
16 Nov 2025பாட்னா : 10-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 19-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மெக்சிகோவில் அரசுக்கு எதிராக ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
16 Nov 2025மெக்சிகோ-சிட்டி : மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
-
சமூக நல விடுதியில் மாணவரை தாக்கிய சக மாணவர்கள் விடுதியில் இருந்து நீக்கம்: கலெக்டர் உத்தரவு
16 Nov 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
யுனிசெப் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
16 Nov 2025சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.
-
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் : ஆர்ப்பாட்டத்தில் புஸ்சி ஆனந்த் பேச்சு
16 Nov 2025சென்னை : வாக்காளர் தீவிர திருத்தத்தைஎதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நேற்று நடைபெற்றது.
-
டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு
16 Nov 2025டெல்லி : டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 9மிமீ தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு முகாம்
16 Nov 2025சென்னை : சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
-
அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு: சபரிமலைக்கு பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
16 Nov 2025திருவனந்தபுரம் : அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
பயங்கரவாதம் குறித்த பேச்சு: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் ஆய்வாளர் பணிநீக்கம்
16 Nov 2025உத்தரப் பிரதேசம் : உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயங்கரவாதம் குறித்த பேசிய காவல் ஆய்வாளர் நரேந்திர குமாரின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்ப


