முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் ரெட்டி ஜாமீன்மனுவை ஆந்திரஐகோர்ட்டு டிஸ்மிஸ்செய்தது

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத். ஜூலை. - 5 - அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில்  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின்  ஜாமீன் மனுவை ஆந்திர ஐகோர்ட்டு  தள்ளுபடி  செய்துள்ளது. ஆந்திராவில்  முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததை  தொடர்ந்து அம்மாநிலத்தில்  யார் முதல்வர் என்ற பிரச்சினை கிளம்பியது. அப்போது தன்னை முதல்ராக்கும்படி ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் மேலிடத்தை கேட்டுக்கொண்டார். ஆனால்  காங்கிரஸ் மேலிடம் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதை அடுத்து ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். காங்கிரசில் கட்சியிலிருந்து விலகிய ஜெகன் மோகன் ஒய்.எஸ்.ஆர்.  காங்கிரஸ் என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை  காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக துவக்கினார். இதை அடுத்து  ஜெகன் மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ. அதிகாரிகள், அளவுக்கு திகமாக சொத்து குவித்ததாக கூறி வழக்கு  தொடர்ந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு  அவர்  ஆந்திர ஐகோர்ட்டில்  மன தாக்கல்  செய்திருந்தார். அந்த மனு மீது  நீதிபதி சமுத்திரலா கோவிந்தராஜூலு விசாரணை நடத்தினார். பிறகு இந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து நேற்று தனது தீர்ப்பை அறிவித்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது ஜெகன் மோகன் தரப்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானியும் சி.பி.ஐ.தரப்பில்  அசோக் பானும் வாதிட்டனர்.

பிறகு இந்த ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்து நீதிபதி உத்தவிட்டார். இந்த வழக்கில் ரூ. 43,000 கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் இது முக்கியமான வழக்கு என்றும் அதனால்  ஜெகன் மோகன் ரெட்டியை ஜாமீனில் விடக்கூடாது என்றும் சி.பி.ஐ.தரப்பில் வாதிடப்பட்டது. ஜெகன் மோகன்ரெட்டி கடந்த மே மாதம் 27 ம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது சந்திரகுடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது ஏற்கனவே  தெரிந்த விஷயம்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்