வாகன சோதனை நடத்துவதை தடை செய்ய முடியாது - ஐகோர்ட்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Madras-High-Court

 

சென்னை, ஏப்.2 - தேர்தல் நியாயமாக நடைபெற தேர்தல் ஆணையம் வாகன சோதனை நடத்துவதை தடை செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட் திட்டவட்டமாக தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-  தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் வீடுகளிலும் திடீர் சோதனை நடத்தப்படுகிறது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. வாகன சோதனையால் பலர் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதற்கிடையே தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் வாகன சோதனைக்கு தடை விதிக்க கோரி தில்லை நடராசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தி.மு.க. அமைச்சர் கே.பி.பி.சாமியும், தேர்தல் அதிகாரிகள் தனது வீட்டில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை ஆரம்பத்தில் விசாரித்த nullநீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால், அதை உறுதி செய்த பிறகே தேர்தல் ஆணையம் வாகன சோதனை செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தர விட்டனர். இதையடுத்து இந்த இடைக்கால உத்தரவை நீnullக்கக் கோரி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அம்பு ரோஸ், பாடம் நாராயணன் மற்றும் சில தொண்டு அமைப்பினர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை தலைமை nullநீதிபதி இக்பால், நீnullதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. ஏற்கனவே இந்த வழக்கில் பிறப்பித்த இடைக்கால உத்தரவை nullநீக்கி நீnullதிபதிகள் உத்தரவிட்டனர். 

அவர்கள் அளித்த தீர்ப்பு விபரம் வருமாறு:-​ தமிழக சட்டசபை தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்துவதற்கு தலைமை தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது. தேர்தல் முடியும் வரை பணம் பட்டுவாடா மற்றும் பொருள் வினியோகம் செய்வதை அனுமதிக்க முடியாது. நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் செலவு கணக்கை கண்காணிக்கும் வழிமுறைகளை தேர்தல் கமிஷன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வாகன சோதனை நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. அதே நேரத்தில் சோதனையின் போது பிடிபடும் பணம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்களைக் காட்டினால் அவற்றை பறிமுதல் செய்யக்கூடாது. அவற்றை உரியவர்களிடம் தேர்தல் கமிஷன் திருப்பி கொடுக்க வேண்டும். பறக்கும் படையினர் நடத்தும் சோதனைகளை வீடியோ கருவியில் பதிவு செய்ய வேண்டும். சோதனையின் போது பறக்கும் படையினர் கண்ணியத்துடனும் கரிசனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். பறக்கும் படையினருக்கு தேர்தல் ஆணையம் தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெருவாரியான குற்றங்களை தடுக்க அதிகப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும். தேர்தலுக்காக பணி இட மாற்றம் செய்யப்படும் அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை அவர்களது பணி புத்தகத்தில் குறையாக காட்டக்கூடாது. இதை வைத்து அதிகாரிகளின் பதவி உயர்வின் போது கருத்தில் கொள்ளக் கூடாது. மனுக்கள் பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு nullநீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: