முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குரானை எரித்தவர் எரித்துக் கொலை

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூலை. 6  - பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்தவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவல்பூரில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை ஒருவர் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே இந்த தகவல் ஊர் முழுவதும் காட்டுத் தீ போன்று பரவியது. இதையடுத்து ஆத்திரத்துடன் காவல் நிலையத்திற்கு சென்ற அப் பகுதியினர் அந்த நபரை ஒன்று போலீசார் தங்கள் கண் முன் கொல்ல வேணடும், அல்லது தாங்கள் கொல்வோம் என்று கூறினர்.

அந்த நபரை வெளியே விட போலீசார் மறுத்தவுடன் அந்த கும்பல் காவல் நிலையத்தை தாக்கியது. இதையடுத்து போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசி கும்பலை கலைக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரைத் தாக்கிவிட்டு அந்த நபரை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். அவர் எந்த இடத்தில் வைத்து குர்ஆனை எரித்தாரோ அதே இடத்தில் அவரை நிற்க வைத்து அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றனர். பாகிஸ்தானில் இஸ்லாமை அவமதித்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago