விம்பிள்டன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை.10 - இங்கிலாந்தில் நடைபெற்று வந்த விம் பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆட வர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற் றினார். இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே போ ராடி தோல்வி அடைந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவர் கடைசி சுற் றில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெட ரருக்கு இது 7-வது விம்பிள்டன் பட்ட மாகும். இதன் மூலம் அவர் சாம்ராசின் சாதனையை சமன் செய்து இருக்கிறார். 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற் று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் பட்டத்தை வெல்ல சுவிஸ் வீரர் ரோஜர் பெடரரும், இங்கிலாந்து வீரர் ஆன்டி முர் ரேவும் மோதினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்ட த்தில், பெடரர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 -6, 7 -5, 6 -3, 6 -4 என்ற செட் கணக்கில் இங்கிலாந்து வீரர் முர்ரேயை வீழ்த்தி சாம்பியன் ஆனார். 

இதன் மூலம் பெடரர் 17-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று டென்னி ஸ் உலகின் முடிசூடா மன்னராக இருக் கிறார். அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்க வீரர் சாம்ராஸ் 14 பட்டமும், ஆஸ்திரேலிய வீரரான ராய் எமர்சன் 12 பட்டமும் பெற்று உள்ளனர். 

விம்பிள்டனுக்கு அடுத்தபடியாக அமெ ரிக்க ஓபன் பட்டத்தை 5 முறையும் (2004, 205,2006,2007,2008),ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 4 முறையும் (2004, 2005,2007, 2010), பிரெஞ்சு ஓபன் பட்ட த்தை ஒரு முறையும் (2009) பெற்று இரு க்கிறார். 

இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பெடரர் கிராண்ட் ஸ்லாம் பட்ட ம் வென்று இருக்கிறார். கடைசியாக 2010 -ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அவர் பட்டம் வென்றார். மேலும் 30 வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெ ன்ற 2- வது வீரர் ஆவார். இதற்கு முன்பு அகாசி பட்டம் பெற்று இருந்தார். 

விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரர் 2 ஆண்டுக்குப் பிறகு, மீண்டும் நம்பர் - 1 இடத்தைப் பிடித் தார். இந்த வெற்றி குறித்து பெடரர் நிருபர்களிடம் கூறியதாவது - 

இந்த வெற்றியை என்னால் நம்ப முடி யவில்லை. எனது ஹீரோவான சாம் ராசின் சாதனையை சமன் செய்தது மகி ழ்ச்சி அளிக்கிறது. முதுகுவலியோடு இந்தப் போட்டியில் விளையாடினேன். 

இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. கடந்த சில ஆட்டங்களில் நான் நன்கு விளையாடினேன். முர்ரே இதுவரை கிரா  ண்ட் ஸ்லாம் பட்டம் பெறவில்லை. அவர் நன்றாகவே ஆடினார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: