முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருபயணிகள் ரயில்கள் மோதல் 3 பேர் பலி - 12 ரயில்கள் ரத்து

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை.- 21 - மகாராஷ்டிர மாநிலத்தில்  இரு  ரயில்கள் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த ரயில் விபத்தை தொடர்ந்து  அந்த வழியாக செல்லும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மும்பையிலிருந்து கசரா என்ற இடத்திற்கு செல்லும் விதர்பா எக்ஸ்பிரஸ் ரயில் கசரா ரயில் நிலையத்திற்கு அருகே வந்து கொண்டிருந்து போது அங்கே ஏற்கனவே தடம்புரண்டு கிடந்த ஒரு பயணிகள் ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.மேலும் 70 பேர் படுகாயம் அடைந்தார்கள். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் மீட்பு படையினுரம் ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த ரயில் விபத்து காரணமாக அந்த வழியாக செல்லும் 12 ரயில்கள் ரத்து  செய்யப்பட்டன. மேலும் 12 ரயில்கள் வேறு மார்க்கங்களில் திருப்பி விடப்பட்டன. இந்த  விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .இது குறித்து விசாரணை நடத்த ரயில்வே  துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு  தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் காயம் அடைந்தவர்களுக்கு  தலா ரூ. 25,000 வழங்கப்படும் என்றும்  மத்திய ரயில்வே துறை அமைச்சர் முகுல் ராய் அறிவித்துள்ளார். அபாய கட்டத்தில் உள்ளவர்களுக்கு தனியார்  மருத்துவ மனைகளில்  சிகிச்சை பெறவும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த  இரு வழிப்பாதையில் ஒரு பாதை விரைவில் திறக்கப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கப்படும் என்று ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்