எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, ஏப்.3 - ஊழல் கலெக்டர்தான் எங்களுக்கு வேண்டும். நேர்மையான கலெக்டர் வேண்டாம் என்று தி.மு.க.வினர் செயல்பட்டு வருகிறார்கள். மதுரை மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, நேர்மையான கலெக்டராக கருதப்படும் சகாயத்தை பொய்ப் புகார் கொடுத்து மாற்றவும், தி.மு.க.வினர் சதித்திட்டம் தீட்டி செயல்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரையை அடுத்த திருமங்கலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்துராமலிங்கமும், தி.மு.க. வேட்பாளராக லதா அதியமானும் களமிறக்கப்பட்டார்கள். திருமங்கலம் என்றாலே மக்களுக்கு இன்றைக்கும் நினைவுக்கு வருவது பணமழைதான். காரணம் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அங்கு பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. திருமங்கலம் மக்களுக்கு சுக்கிர திசையோ என்று நினைக்கும் அளவிற்கு அங்கு பணபலம் விளையாடியது. வாக்காளர்களுக்கு ரூ. 5000 முதல் 10,000 வரை தி.மு.க.வினரால் கொடுக்கப்பட்டதாக இன்றளவும் சொல்லப்படுகிறது. பணம் மட்டுமல்ல, செல்போன், வேஷ்டி சேலைகள், பழனி பஞ்சாமிர்தம், இன்னும் சொல்லப்போனால் தங்கக் காசுவரைகூட கொடுத்ததாக இப்போதும் மக்கள் சொல்கிறார்கள். திருமங்கலம் பார்முலா என்று பெயர் சூட்டும் அளவுக்கு அந்த இடைத் தேர்தல் மக்களிடம் பிரபலமானது.
இவ்வாறு மக்களுக்கு அப்போது பணம் கொடுக்கப்பட்டதில் தற்போதைய மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும் தொடர்பு இருப்பதாக விக்கிலீக்ஸ் இணையதளமே சமீபத்தில் தகவல் வெளியிட்டிருந்தது. இந்த திருமங்கலம் பார்முலா அடுத்தடுத்து நடந்த தேர்தல்களிலும் பின்பற்றப்பட்டது. இந்த மோசமான நடைமுறை ஏப்ரல் 13 ம் தேதி நடக்கும் சட்டமன்ற தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படலாம் என்று சிந்தித்த தேர்தல் கமிஷன், இந்த மோசமான பழக்கத்திற்கு செக் வைக்க முடிவெடுத்தது. அதன் எதிரொலிதான் தற்போது நடந்துவரும் அதிரடி வாகனச் சோதனைகள். தமிழகம் முழுவதும் இதுவரை நடந்த வாகன சோதனைகள் மூலம் ரூ. 25 கோடிவரை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரே கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக கடத்தப்பட்ட வேட்டிகள், சேலைகள், மப்ளர்கள்கூட கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளால் மிரண்டுபோன தி.மு.க.வினர் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றமோ வாகனச் சோதனைகளுக்கு தடைவிதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அப்படியிருந்தும்கூட தி.மு.க.வினர் 108 ஆம்புலன்ஸ் வாகனம், மற்றும் போலீஸ் வாகனங்களில் கூட பணத்தை கடத்தி மக்களுக்கு கொடுப்பதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. தேர்தல் ஆணையமும் விடுவதாக இல்லை. தி.மு.க.வினர் செல்லும் வாகனங்களை துரத்தி துரத்தி அடிக்கிறது தேர்தல் கமிஷன். இதனால் பல இடங்களில் பணம் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் தி.மு.க.வினர். சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க இவர்களுக்கு துப்பில்லை. துட்டை கொடுத்துத்தான் ஓட்டு வாங்க வேண்டும் என்பதுதான் இவர்களது அவல நிலையாக உள்ளது. காரணம் கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள் மக்களுக்கு செய்த கொடுமைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதனால்தான் காசு கொடுத்தால்தான் ஓட்டு வாங்க முடியும் என்ற முடிவுக்கே தி.மு.க.வினர் வந்துவிட்டனர்.
ஆனால் தேர்தல் கமிஷனோ அதற்கு செக் வைக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அழகிரி வீட்டில் போடப்பட்டிருந்த லோக்கல் போலீசார் மாற்றப்பட்டு மத்திய போலீஸ் படை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல ஊழல் கலெக்டராக செயல்பட்ட காமராஜ், அதிரடியாக மாற்றப்பட்டார். கிரானைட் விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத கலெக்டர் இவர்.
இவருக்கு பதிலாக சகாயம் என்கிற நேர்மையான கலெக்டர் தேர்தல் கமிஷனால் மதுரைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நேர்மையான அதிகாரிகளைத்தான் தி.மு.க.வினருக்கு பிடிக்காதே. சகாயம் வந்தது முதல் இவர்களது ஜம்பம் பலிக்கவில்லை. தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் நன்கு கவனித்து அதைத் தடுத்துவருகிறது. இதனால் மிரண்டுபோன தி.மு.க.வினர் நேர்மையான கலெக்டர் சகாயத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று திட்டம் போட்டுவிட்டார்கள். மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) இருப்பவர் சுகுமாறன். இவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். புகாரின் சுகுமாறன் கூறியிருப்பதாவது:-
மத்திய அமைச்சராக இருக்கும் அழகிரி மீதும், மதுரை கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளரும், புறநகர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான மூர்த்தி மீதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்து அதுவும் கைதாகும் அளவுக்கு வழக்கு பதிவு செய்யுமாறு மதுரை கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சகாயம் என்னை வற்புறுத்துகிறார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. எனவே என்னை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். மனுவை அனுப்பிய கையோடு வடமலையான் மருத்துவமனையிலும் இவர் அட்மிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆர்.டி.ஓ.வின் இந்த புகார் ஒரு பொய்ப் புகார் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார் செல்லூர் ராஜு.
மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் செல்லூர் ராஜு. இவர் இந்த புகார் பற்றி கூறியதாவது:-
ஆர்.டி.ஓ. சுகுமாறன் தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த விரும்பும் கலெக்டர் சகாயத்தை மாற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சுகுமாறனின் புகார் பொய்யானது. தமிழ்நாட்டில் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும். அதற்கு இதுபோன்ற நேர்மையான கலெக்டர் தான் தேவை. எனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார். ஆர்.டி.ஓ. சுகுமாறனின் புகார் ஒரு பொய்ப் புகார் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. பொய்ப் புகார் கொடுப்பது தி.மு.க.வினருக்கு கைவந்த கலை. பொய்வழக்குபோடுவதும் இவர்களுக்கு கைவந்த கலை. கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய தினபூமி ஆசிரியர் மணிமாறன் அவர்களை தி.மு.க. அரசு கடந்த ஜூலை மாதம் கைது செய்தது. ஆனால் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் நடத்திய ஆர்பாட்டத்தை அடுத்து அவர் 24 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும்கூட தி.மு.க. அரசு அவர்மீது 5 பொய் வழக்குகளை புனைந்தது. கிரானைட் ஊழல் பற்றி புகார் கொடுக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊழலை அம்பலப்படுத்திய தினபூமி ஆசிரியரையே தி.மு.க. அரசு கைது செய்ததோடு பொய்வழக்குகளையும் போட்டது. அப்படிப்பட்ட இந்த ஆட்சியாளர்கள் தங்களுக்கு வளைந்துகொடுக்கவில்லை என்பதற்காக கலெக்டரை மாற்ற நினைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையே? ஆக இவர்களுக்கு ஊழல் கலெக்டர்தான் வேண்டும். நேர்மையான கலெக்டர்கள் இருக்கக் கூடாது. இதுதான் தி.மு.க.வினரின் தாரக மந்திரம். இதை பொதுமக்கள் புரிந்துகொண்டால் சரி.
கருணாநிதியின் சர்வாதிகார ஆட்சியில் மதுரை கலெக்டராக பணியாற்ற தகுதிகள்
கீழ்கண்ட தகுதிகள் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிய முடியும்.
1. மு.க.அழகிரிக்கு ஜால்ரா போடவேண்டும். எடுபிடியாகவும் இருக்க வேண்டும்.
2. வாக்காளர்களுக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்ததை போல தற்போதும் வாக்காளர்களுக்கு தி.மு.க. பணம் கொடுப்பதை தடுக்க கூடாது.
3. போலீஸ் வேன்கள், 108 ஆம்புலன்ஸ் வண்டிகள் ஆகிய வண்டிகளில் பணத்தை கடந்த தி.மு.க.வினரை அனுமதிக்க வேண்டும்.
4. கிரானைட் கொள்ளை மூலம் தி.மு.க.வுக்கு
பெரும் பங்கு வருவதால் கிரானைட் கொள்ளை சம்பந்தமாக புகார் வந்தால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த புகாரை குப்பை தொட்டியில் போட்டுவிட வேண்டும். அரசு சொத்தை கொள்ளை அடிக்கும் கிரானைட் கொள்ளையர்களை பாதுகாக்க வேண்டும்.
5. தி.மு.க. செய்யும் அனைத்து ஊழல்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்த தகுதிகள் இருந்தால் மட்டுமே கருணாநிதியின் சர்வாதிகார ஆட்சியில் மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிய முடியும். இந்த தகுதிகள் இல்லாத கலெக்டரை மு.க.அழகிரிக்கு பிடிக்காது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை : ஆற்றுக்குள் இறங்க, குளிக்க தடை
21 Oct 2025ஆண்டிபட்டி : வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.