முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது இம்ரான்கான் சரமாரி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

லாகூர்,ஆக.- 5 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது இம்ரான்கான் சரமாரியாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். வெளிநாட்டு வங்கிகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் போட்டு வைத்திருப்பதாக நவாஸ் மீது இம்ரான்கான் குற்றஞ்சுமத்தியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் அரசியலில் குதித்து தெஹ்ரிக்-இ-இன்சாப் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் இவர் ஒரு புற்றுநோய் மருத்துவமனையையும் நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனைக்கு பல பெரிய கம்பெனிகள் நன்கொடை வழங்கியுள்ளன. நன்கொடையாக வந்த பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சி தலைவர்கள் கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மீதும் இம்ரான்கான் கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார். வங்கிகளில் கடன் வாங்கிய நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை வெளிநாட்டு வங்கிகளில் ஷெரீப் பதுக்கி வைத்திருப்பதோடு வரி ஏமாற்றமும் செய்துள்ளார் என்று இம்ரான்கான் சரமாரியாக குற்றஞ்சாட்டி உள்ளார். வங்களில் வாங்கிய கடனை ஷெரீப் ஒருபோதும் கட்டியதில்லை. நான் கேட்கும் 11 கேள்விகளுக்கு பதில் சொல்ல ஷெரீப் தயாரா? டெலிவிஷனில் கூட இருவருக்கும் இடையே நடக்கும் விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் தாம் தயாராக இருப்பதாகவும் இம்ரான்கான் சவால் விடுத்துள்ளார். இஸ்லாமாபாத்தில் சுமார் ரூ.40 மில்லியன் அளவுக்கு நிலம் வாங்கி உள்ளார். லண்டனிலும் அவருக்கு நிலம் இருந்தது. அதை 70 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். எனக்குள்ள சொத்து விபரத்தை தெரிவித்துள்ளேன். அதை என் இணையதளத்திலும் வெளியிட உள்ளேன். எல்லா சொத்துக்களும் என் பெயரில் உள்ளன. 417 அமெரிக்க டாலர் அளவுக்கு நவாஸ் ஷெரீப் ஊழல் புரிந்துள்ளார் என்று எழுத்தார் ராய்மாண்ட் பேக்கர் எழுதியுள்ள புத்தகத்தில் கூறியுள்ளார் என்றும் இம்ரான் கான் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!