முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சல பிரதேசத்தில் பஸ் கவிழந்து 40 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

சிம்லா. ஆக. 12  - இமாச்சல பிரதேச மாநிலத்தில்  கிடு கிடு பள்ளத்தில் பயணிகள் பஸ் தலைகுப்புற கவிழந்து விழுந்ததில் 40 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தார்கள்.  அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்செந்றதால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசார்  தெரிவித்தனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள துலேரா என்ற நகரில் இருந்து  சம்பா என்ற நகருக்கு பயணிகள் பஸ் ஒன்று  சென்று கொண்டிருந்தது.  இந்த பஸ்  சம்பா நகருக்கு அருகே  ராஜேரா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்து  ரோட்டிலிருந்து விலகி கிடு கிடு பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து 

விழுந்தது. இந்த கோர விபத்தில் அதே இடத்தில் 32 பயணிகள் உடல் சிதறி பலியானார்கள். படுயாகம் அடைந்து  மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில்  மேலும் 8 பேர்  பலியானார்கள்.  இதை அடுத்து  இந்த விபத்தில் பலியானாவர்களின் எண்ணிக்கை  40 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படுகாயம் அடைந்த 20 பேர் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

படுகாயம் அடைந்தவ்ரகள் அனைவரும் மீட்பு குழுவினரால் உடனடியாக மீட்கப்பட்டனர். என்றாலும் பலியானவர்களின் உடல்களை  மீட்கும் பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள்  சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக  போலீசார் தெரிவித்தனர். என்றாலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு  இமாச்சல பிரதேச முதல்வர்  பிரேம் குமார் துமால் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு  அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்